இனிமே முழுக்க முழுக்க மாஸ் கமர்ஷியல் படம் மட்டும்தான்!.. எஸ்.கே. கொடுத்த அப்டேட்….

X
இனிமே முழுக்க முழுக்க மாஸ் கமர்ஷியல் படம் மட்டும்தான்!.. எஸ்.கே. கொடுத்த அப்டேட்….

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கி அப்படியே கதாநாயகனாக உயர்ந்தவர்தான் சிவகார்த்திகேயன். சில வருடங்களிலேயே அவருக்கு முன் சினிமாவுக்கு வந்த சீனியர் நடிகர்களை ஓரம் கட்டிவிட்டு அவர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சிவகார்த்திகேயன் மாறியதுதான் அவரின் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

காதல் கலந்த காமெடி படங்கள்தான் சிவகார்த்திகேயனுக்கு எப்போதும் கை கொடுக்கும் என்றாலும் இடையிடையில் ஹீரோ, வேலைக்காரன், மதராஸி, அமரன், பராசக்தி போன்ற சீரியசான கதைகளிலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ஆனால் இதில் அமரன் திரைப்படம் மட்டுமே ஓடியது. மற்ற படங்கள் தோல்வியடைந்தது..

தற்போது தாய்க்கிழவி திரைப்படத்தை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ஒருபக்கம் சமீபத்தில் சென்னை போரூரில் தனது ரசிகர்களையும் அவர் சந்தித்தார். அப்போது அவர் பேசிய முழு வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.

ரசிகர்கள் முன்பு பேசிய சிவகார்த்திகேயன் ‘இனி முழுக்க முழுக்க ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் மாஷ் கமர்சியல் திரைப்படங்களில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளேன்.. இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் திரைப்படமும் அப்படி ஒரு மாஸ் கமர்சியல் பொழுதுபோக்கு படமாகவே இருக்கும். இந்த படத்தின் முதல் கட்டப்பிடிப்பு துவங்கி ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஒரு பாடல் காட்சியை படம் பிடித்து வருகிறோம்’ என அவர் தெரிவித்திருக்கிறார்.