ஆல்பம் பாடல்களை வெளியிட்டு இளைஞர்களிடம் பிரபலமானவர் ஆதி. ஹிப் ஹாப் தமிழா என்று தனக்கு தானே பெயர் வைத்துக் கொண்டார். அவருடைய பாடல்களுக்கு இளசுகளிடம் வரவேற்பு இருந்ததால் திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு வந்தது.
தனி ஒருவன், ஆம்பள, அரண்மனை 3, மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட பல படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அதேபோல் ஒரு கட்டத்தில் சினிமாவில் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கினார். அவர் முதலில் இயக்கி நடித்த திரைப்படம் 2017ம் வருடம் வெளியான மீசைய முறுக்கு. அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம், அன்பறிவு, வீரன் பிடி சார் உள்ளிட்ட படங்களில் நடித்தார்..
சமீபத்தில் அவர் இயக்கி நடித்து வெளியான மீசைய முறுக்கு 2 திரைப்படமும் வெளியாகி ர சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த கருணாஸ் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘மீசைய முறுக்கு 2 படத்தில் நடித்த போதுதான் ஆதியை சந்தித்தேன்.. அந்த பையனிடம் அவ்வளவு எனர்ஜி இருக்கு.. மியூசிக் பண்றார்.. நடிக்கிறார்.. படத்தை இயக்குகிறார்.. அவரை பார்க்கும்போது அவருக்கு முன்னால் நாமெல்லாம் ஒன்னுமே இல்லை’ என எனக்கு தோன்றியது’ எனக் கூறியிருக்கிறார்..







