‘கருப்பு’ மற்றும் விஸ்வநாத் & சன்ஸ்’ படங்களின் வெற்றியை அடுத்து ‘தி ஒன்’ சூர்யா நடித்து கொண்டிருக்கும் படம் தான் ‘சீன்’.
இதை இயக்குநர் ஜித்து மாதவன் தான் இயக்கி வருகிறார். ஆல்ரெடி இதன் ஷூட்டிங் முடிந்து விட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் டாப் கியரில் நடந்து வருகிறது.
இதில் ஹீரோயின் ஆக நஸ்ரியா வலம் வரப்போகிறார். சமீபத்தில், இதன் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.
தற்போது, சுஷின் ஷ்யாம் இசையில் இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ‘ஆதி இவ யார்ரா’ வருகிற அக்டோபர் 8-ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போவதாக தகவல் கிடைத்திருக்கிறது. படம் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.







