Dorothy படத்தின் OTT ரிலீஸ் தேதியை லாக் பண்ண Netflix!
‘டோரதி’ படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது.

கோலிவுட்டில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவரது இயக்கத்தில் உருவான புதிய படம் தான் ‘டோரதி’.
இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி தான் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதில் சனந்த், ரிஷிகாந்த் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும், கெஸ்ட் ரோலில் நடிகை கீர்த்தி சுரேஷ் வலம் வந்துள்ளார். இந்த படத்துக்கு ‘இசைஞானி’ இளையராஜா தான் இசை அமைத்திருக்கிறார்.
இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும், விமர்சன ரீதியாக அதிக பாராட்டை குவித்தது. தற்போது, இதன் OTT ரிலீஸ் தேதியை லாக் பண்ணியிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம். வருகிற அக்டோபர் 23-ஆம் தேதி வெளியாகிறதாம்.




