எக்ஸ்பெக்டேஷன் லெவலை கூட்டிய ரஜினியின் Jailer 2 ட்ரெய்லர்!
ஜெயிலர் முதல் பாகத்தை இயக்கிய நெல்சன் தான் இதையும் இயக்கியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நம்ம ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். இவர் நடிப்பில் ரெடியாகி உள்ள லேட்டஸ்ட் படம் தான் ‘ஜெயிலர் 2’.
ஏற்கனவே, இயக்குநர் நெல்சன் – ரஜினி காம்பினேஷனில் இதன் முதல் பாகம் 2023-ல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதுக்கு நம்ம ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் தான் இசையமைத்திருக்கிறார். இதன் ட்ரெய்லரை இன்று ரிலீஸ் செய்துள்ளனர்.
இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை கூட்டி விட்டது. படத்தை வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.




