latest news

ரசிகர் மன்ற சந்திப்பு!.. விஜய்க்கு எதிரா இல்ல.. தனுஷுக்கு எஸ்.கே. வைக்கும் செக்!..

சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற சந்திப்பின் பின்னணி..

நடிகர் விஜய் பல வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வர வேண்டும் என முடிவெடுத்தார். அதன் தொடர்ச்சியாக அவரின் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றி விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினர். மன்ற நிர்வாகிகள் பல நற்பணிகளையும் செய்து வந்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சியை துவங்கிய விஜய் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறிவிட்டார்.

திமுகவை தவிர எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், கமல்ஹாசன், விஜய் என திரையுலக பிரபலங்கள் அரசியலுக்கு வந்தனர். ரஜினி திட்டமிட்டு வரமுடியாமல் போய்விட்டது. இதில், விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறிய நிலையில் சில நடிகர்களுக்கும் அந்த ஆசை வந்திருப்பதாக பார்க்கப்படுகிறது..

விஜயின் ஸ்டைலிலேயே தங்களின் ரசிகர் மன்றங்களை தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ,சூர்யா போன்ற நடிகர்கள் நற்பணி மன்றங்களாக மாற்றி விட்டனர். அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து ‘மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.. மக்களுக்காக பணியாற்றுங்கள்.. எதிர்காலத்தில் நாம் ஒரு நல்ல முடிவை எடுப்போம்’ என அவர்கள் பேசியும் வருகிறார்கள்.

இந்நிலையில்தான், சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற சந்திப்பை நடத்தினார். அந்த சந்திப்பு நடந்த திருமண மண்டபமே ஒரு அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அதற்கு சில கோடிகள் செலவானதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ரசிகர் மன்ற சந்திப்பில் வெள்ளை சீருடையுடன் சுமார் 2 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொண்டனர்..

அந்த ரசிகர் சந்திப்பில் பேசிய சிவகார்த்திகேயன் தான் அரசியலுக்கு வருவது பற்றி எதுவும் பேசவில்லை. அதே நேரம் பிற்காலத்தில் ஒரு எதிர்காலம் இருக்கிறது என்று பொடி வைத்து பேசியிருக்கிறார். அனேகமாக இன்னும் 10 வருடங்கள் கழித்து சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதையடுத்து விஜய்க்கு போட்டியாக சிவகார்த்திகேயன் அரசியலில் ஈடுபட முடிவு செய்திருக்கிறார் என விஜய் ரசிகர்கள் பேசும் நிலையில் அவர் ரசிகர் மன்ற சந்திப்பை நடத்தியது விஜய்க்கு எதிராக அல்ல.. அது தனுசுக்கு வைக்கப்படும் செக் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்..

ஏனெனில், சில நாட்களுக்கு முன்பு ரசிகர்கள் சந்திப்பை நடத்திய தனுஷ் ‘நாம் இப்படியே இருக்கக் கூடாது.. அடுத்த இடத்திற்கு செல்ல வேண்டும்’ என்றெல்லாம் பேசியிருந்தார். எனவே, தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. ஒருமுறை கூட தனுஷ் அதை மறுக்கவில்லை. எனவே தனுஷை தனது போட்டி நடிகராக பார்க்கும் சிவகார்த்திகேயன் அவருக்கு எதிராகவே ரசிகர் மன்ற சந்திப்பை நடத்தியிருக்கிறார் என அவர்கள் சொல்கிறார்கள்.

Author
சிவா ✓

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]