உங்களுக்கு எதிர்காலம் இருக்கு!.. 2036-ல் முதலமைச்சர்!.. சிவகார்த்திகேயன் போடும் கணக்கு!..
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சந்திப்பு..

சமீப காலமாகவே திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து ரசிகர் மன்ற சந்திப்பை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே நடிகர் விஜய் பலமுறை ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பதை நடத்தி அரசியல் கட்சியை துவங்கி தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராகிவிட்டார். அதை பார்த்து பலருக்கும் அரசியல் ஆசை வந்திருக்கிறது போல. ஏற்கனவே சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோ ரசிகர் மன்ற சந்திப்பை நடத்தினார்கள். இந்நிலையில்தான், நடிகர் சிவகார்த்திகேயன் போரூரில் ரசிகர்கள் சந்திப்பை நடத்தியிருக்கிறார்..
இந்த நிகழ்ச்சியில் சுமார் 2 ஆயிரம் பேர் வெள்ளை நிற ஆடை அணிந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் ‘குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.. நன்றாக படித்து நல்ல சம்பாதிக்க வேண்டும்.. முதலில் குடும்பம்தான் முக்கியம்.. தினமும் 15 நிமிடங்களாவது புத்தகங்களை படியுங்கள்.. அதன் மூலம் உங்கள் சிந்தனை மேம்படும்.. நம்மை விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துங்கள்’ என்று அறிவுரை செய்திருக்கிறார். குறிப்பாக ‘பிற்காலத்தில் நமக்கொரு எதிர்காலம் இருக்கிறது’ என்று பொடி வைத்தும் பேசியிருக்கிறார்..

ரசிகர் மன்ற சந்திப்பு நடந்த அந்த மண்டப வளாகம் ஒரு அரசியல் மாநாடு போல உருவாக்கப்பட்டிருந்தது. இதற்காக கடந்து சில மாதங்களாகவே வேலைகள் நடந்தாலும் மிகவும் ரகசியமாக வைத்திருந்தார்கள். அந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரசிகர் மன்ற நிர்வாகிகள் ‘சிவகார்த்திகேயன் கட்சி தொடங்குவதற்கான சூழ்நிலை இப்பொழுது இல்லை.. இப்போது நாங்களும் அதை விரும்பவில்லை.. எதிர்காலத்தில் அவர் அப்படி முடிவு எடுத்தால் அவருடன் இணைந்து பணியாற்றுவோம்.. நற்பணி இயக்கத்தை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என அவர் எங்களுக்கு ஆலோசனை வழங்கினார்’ என கூறியிருக்கிறார்கள்.
ஒருபக்கம், தனது நெருக்கமான நட்பு வட்டாரங்களிடம் 2036-ல் தமிழ்நாட்டில் முதலமைச்சராக நான் வரவேண்டும் என சிவகார்த்திகேயன் சொன்னதாக செய்திகள் வெளியே கசிந்திருக்கிறது.




