ஜாக்கெட் ட்ரோல்… என் படம்தான் பதிலடி!.. அட்லி கொடுத்த விளக்கம்!..
ஜாக்கெட் ட்ரோல் பற்றி பேசிய அட்லி..

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் படங்களை இயக்கி வருபவர் அட்லீ. ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி விஜயை வைத்து தெறி, மெர்சல், விசில் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதன்பின், பாலிவுட்டுக்கு போய் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தையும் இயக்கினார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து 1300 கோடி வரை வசூல் செய்தது.
தற்போது அல்லு அர்ஜூனை வைத்து ராக்கா என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹாலிவுட்டை சேர்ந்த கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவரின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து சமீபத்தில் வெளியான பத்தா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது.
ஒருபக்கம், அட்லி தொடர்பாக பல ட்ரோல்கள் சமூக வலைத்தளங்களில் பார்க்கமுடியும். அதில் ஒன்றுதான் ஒருமுறை மும்பையில் அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டபோது அம்பானி என அச்சிடப்பட்ட ஜாக்கெட்டை அட்லியின் மனைவி அணிந்து வந்தது..
இந்நிலையில், பத்தா திரைப்பட வெற்றி விழாவில் இதுபற்றி பேசிய அட்லி ‘ நான் கருப்புதான். சுமாராத்தேன் இருக்கேன். அதனாலதான் என்னை ட்ரோல் பண்றாங்க.. அம்பானி மகன் எனக்கு நெருங்கிய நண்பன். மும்பையில் நான் கஷ்டப்பட்ட நேரத்துல என் கையை பிடிச்சி என் கூட இருந்தவன் அவன். சொல்றவங்க ஆயிரம் சொல்லட்டும். அவங்களுக்கு என் படம் மூலமா பதில் கொடுத்துட்டு வரேன்’ என அவர் கூறியிருக்கிறார்.




