தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குறிப்பாக ரஜினி, கமல், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் நடித்த படங்களில் ஆக்சன் காட்சிகளை அமைத்தவர்கள் அன்பு – அறிவு என்கிற இரட்டை சகோதரர்கள். கமலுக்கு விக்ரம் உள்ளிட்ட சில படங்களில் அவர்கள்தான் ஆக்சன் காட்சிகளை அமைத்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய பல படங்களுக்கும் அன்பு – அறிவுதான் சண்டைக் காட்சிகளை அமைத்தனர்..
தற்போது அவர்கள் இயக்குனராக அவதாரம் எடுக்கவிருக்கிறார்கள். முதல்முறையாக கமலை வைத்து அவர்கள் ஒரு திரைப்படத்தை இயக்குவதாக எப்போதோ செய்திகள் வெளியானது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை.. அதற்கான ஷூட்டிங் தற்போது வரை துவங்கப்படவில்லை..
இந்நிலையில்தான் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அன்பு – அறிவு இணைந்து இயக்கவுள்ள படத்தில் அனிருத் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. அனேகமாக இந்த படத்தில் அனிருத்துடன், லோகேஷ் கனகராஜும் இணைந்து நடிப்பார் என சொல்லப்படுகிறது.
அனிருத்தை சினிமாவில் நடிக்க வைக்க பலரும் முயற்சி செய்து வந்த நிலையில் அதில் ஏதோ அவர் ஆர்வம் காட்டாமல் இருந்தார். எப்படியும் விரைவில் அவர் ஒரு திரைப்படத்தின் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.







