‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் ‘ஜெயிலர் 2’. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இந்த படத்தை வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில், இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது, ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் எக்ஸ் தளத்தில் ‘ஜெயிலர் 2’ சூப்பர் ஷோ என்ற தலைப்பில் ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.
இந்த ஷோவில் ரஜினி, நெல்சன், எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் இப்படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசியுள்ளனர். இதை வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி சன் நெக்ஸ்ட் OTT தளத்தில் வெளியிடவுள்ளனர்.







