யூடியூபில் ரஜினியின் Jailer 2 ட்ரெய்லர் செய்த மாஸான சம்பவம்!
நேற்று மாலை ‘ஜெயிலர் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

கோலிவுட்டின் ‘சூப்பர் ஸ்டார்’ கைவசம் ‘ஜெயிலர் 2’ மற்றும் ‘தர்மன்’ என இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.
ரஜினியுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், யோகி பாபு, நமோ நாராயணா, சூரஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளனர். மேலும், கெஸ்ட் ரோல்களில் சிவராஜ்குமார், மோகன்லால், ஹ்ரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்கள்.
படத்தை வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். நேற்று மாலை இதன் ட்ரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது.
இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதுவரை இதை 20 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்திருப்பதாக ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.




