சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி ரஜினி நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர் 2. இந்த படத்தின் முதல் பாகம் 2023ம் வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அந்த படத்தை போலவே ஜெயிலர் 2-விலும் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்கள்..
அதுபோக விஜய் சேதுபதி, ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் சிறப்பு கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற 15ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. அதேநேரம் வழக்கமாக ரஜினி படத்திற்கு நடத்தப்படும் இசை வெளியீட்டு விழா இந்த படத்திற்கு நடக்கவில்லை.
அதற்கு பதிலாக ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதில் ரஜினி, நெல்சன், அனிருத் உள்ளிட்ட படக்குழு கலந்துகொண்டு படத்தை பற்றி உரையாடும் நிகழ்ச்சி சமீபத்தில் நடத்தப்பட்டது. விரைவில் அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது..
ஒருபக்கம் வெளிநாடுகளில் ஜெயிலர் 2-வுக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தொடங்கிவிட்டது. பொதுவாக, சின்ன திரைப்படங்களுக்கு 8 முதல் 10 டாலர்கள் வரை டிக்கெட் விற்கப்படுமாம். கொஞ்சம் அதிகமான பட்ஜெட் என்றால் 22 முதல் 25 டாலர்கள் வரை டிக்கெட் விற்கப்படுமாம்..
ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு 28 டாலர் வரை டிக்கெட்டை விற்பனை செய்திருக்கிறார்கள். ஆனால் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு டிக்கெட் விலை 35 டாலராக நிர்ணயம் செய்துள்ளனர். ஆனாலும், டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறதாம்.







