கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பத்தாவது படம் தான் ‘டோரதி’. இதில் ரிஷிகாந்த், சனந்த் இணைந்து நடிக்க, முக்கிய கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
இதற்கு நம்ம ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருந்தார். கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆன இப்படம் விமர்சன ரீதியாக லைக்ஸ் அள்ளி வருகிறது.
தற்போது, இந்த படத்தை பார்த்து ரசித்த பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் எக்ஸ் தளத்தில் “இன்று ‘டோரதி’ பார்த்தேன். ரொம்ப தாமதம் தான். ஆனாலும் பெரும் மனநிறைவை கொடுத்த படம்.

எப்படியாப்பட்ட மனிதர்களின் கதைகள் படமாக்கப்படவேண்டும் என்று பெரும் விருப்பத்தோடு இருக்கிறோமோ அப்படியாப்பட்ட மனிதர்களின் கதையும் அழுகையும் ஆசைகளும் விருப்பங்களும் துரோகங்களும் கனவுகளும் நம்பிக்கைகளும் அப்பட்டமாய் படம் பிடிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கு காரணமான கார்த்திக் சுப்புராஜிற்கும், அதை பெரும் தூணாக நின்று சாத்தியபடுத்திக் கொடுத்த நம் ராஜாவின் இசைக்கும், மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகளும் அன்பும்…” என்று பதிவிட்டுள்ளார்.







