D56 ஷூட்டிங்கிற்கு பக்கா ஸ்கெட்ச் போட்ட தனுஷ்!

X
D56 ஷூட்டிங்கிற்கு பக்கா ஸ்கெட்ச் போட்ட தனுஷ்!

தனுஷின் லேட்டஸ்ட் படமான ‘ஓம்’-ஐ ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இது வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கவுள்ள படம் ‘D56’. இதை தமிழரசன் பச்சமுத்து இயக்கவுள்ளாராம். இதில் ஹீரோயின் ஆக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கவுள்ளார்.

மேலும், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, விஜய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இதுக்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளாராம்.

கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி தான் இந்த படத்துக்கு பூஜை போட்டனர். தற்போது, இதன் ஷூட்டிங்கை அடுத்த வாரத்தில் இருந்து சென்னையில் துவங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.