Ajith: குடும்பத்தை பாக்கணும் ஏகே!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே அஜித்!…

X
Ajith: குடும்பத்தை பாக்கணும் ஏகே!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே அஜித்!…

நடிகர் அஜித் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். மோட்டார் பந்தயத்தை இந்திய அளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே லட்சியம் என ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அதனால்தான் மோட்டார் பந்தய விளையாட்டை தமிழ்நாட்டில் கொண்டுவரப் போவதாக முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவித்த போது முதல் நாளாக அதற்கு நன்றி தெரிவித்து அஜித் ஒரு அறிக்கை வெளியிட்டார்..

கடந்த சில வருடங்களாகவே துபாய், சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள் என பல நாடுகளிலும் நடக்கும் கார் பந்தய போட்டிகளில் அஜித்தின் டீம் கலந்து கொண்டு வருகிறது. சமீபத்தில் அஜித்தின் டீம் லண்டனில் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்ட போது முன்னாள் நடிகரும், தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் நேரில் சென்று அந்த போட்டியை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள அஜித் ‘நான் இப்போது போர்ச்சுகல் நாட்டின் அல்கார்வ் பகுதியில் உள்ள போர்டிமாவ் சர்க்யூட்டில் இருக்கிறேன்.. அக்டோபர் 9, 10 இரண்டு தேதிகளில் நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயத்தின் இறுதி சூற்றுக்காக நான் இங்கே இருக்கிறேன்.. உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். Love you all’ என அதில் அவர் பேசியிருந்தார்..

இது தொடர்பான செய்தியை நெட்டிசன்கள் பலரும் தங்களின் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ‘எங்கள் குடும்பத்தை பாக்கணும் தல’ என பதிவிட்டு வருகிறார்கள்.அதாவது ‘நடிகர்கள் நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம்.. ரசிகர்களின் அன்பை மதிக்கிறோம்.. ஆனால் ரசிகர்கள் அவர்கள் வேலையை மட்டுமே பார்க்க வேண்டும்..

குடும்பத்தை கவனிக்க வேண்டும்.. அவர்களின் தொழிலை கவனிக்க வேண்டும்.. நடிகர்களின் பின்னால் சுற்றக்கூடாது’ என அஜித் தொடர்ந்து அறிவுரை கூறி வரும் நிலையில் அவரின் பொருளை எடுத்து அவரையே போடுவது போல ‘எங்களுக்கு வேலை இருக்கு ஏகே’ என்று ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்…