The Paradise ஓட ஆக்ஷன் போதும்… தமிழ் இயக்குநரின் லவ் ஸ்டோரியில் நடிக்கும் நானி!

X
The Paradise ஓட ஆக்ஷன் போதும்… தமிழ் இயக்குநரின் லவ் ஸ்டோரியில் நடிக்கும் நானி!

‘சரிபோதா சனிவாரம், ஹிட் 3, தி பாரடைஸ்’ என தொடர்ந்து ஆக்ஷன் படங்களையே டிக் அடித்து நடித்து வருகிறார் தெலுங்கு நடிகர் நானி.

அதுவும் ‘தி பாரடைஸ்’ பாக்ஸ் ஆபிஸில் செம்ம அடி வாங்கியது. இவரது அடுத்த படமான ‘ப்ளடி ரோமியோ’ கூட ஆக்ஷன் படம் தானாம்.

இயக்குநர் சுஜீத் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. அதற்குள் அடுத்த படத்தை டிக் அடித்து விட்டார் நானி. ஆனா, இந்த வாட்டி ஆக்ஷன் படம் இல்லையாம்.

இது பக்கா லவ் ஸ்டோரியாம். இதை நம்ம ’96, மெய்யழகன்’ ஆகிய தமிழ் படங்களை பண்ண இயக்குநர் பிரேம் குமார் தான் இயக்கப்போகிறாராம். இதனை ‘ஏசியன் சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ளது.