‘காந்தி டாக்ஸ்’ படத்துக்கு பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன படம் ‘பத்தா’. பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இதை அடுத்து விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படம் ‘இஞ்சி வெல்லம்’. இதை கோலிவுட்டின் டாப் இயக்குநரான மணிரத்னம் தான் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இதன் ஷூட்டிங் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

படத்தை அடுத்த ஆண்டு (2027) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். வழக்கமாக ஒரு படத்துக்கு ரூ.15 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் சேதுபதி, ‘இஞ்சி வெல்லம்’ மணிரத்னம் இயக்கும் படம் என்பதால் அவருக்காக வெறும் ரூ.6 கோடி சம்பளத்துக்கு ஓகே சொல்லி நடித்துக் கொண்டிருக்கிறாராம்.







