More
Categories: latest news television

பிரச்னைக்கு உங்களுக்கு மட்டும் பஞ்சமே இருக்காது போல!… இதுல கோபி வேற காமெடி பண்ணுறாரே!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியாவும், ராமமூர்த்தியும் வாக்கிங் வருகின்றனர். அங்கு கோபியும் வாக்கிங் சென்று வந்து நின்று கொண்டு இருக்கிறார். சரியாக அவர் இடத்துக்கு வரும் போது சிலர் வந்து பாக்கியாவை மினிஸ்டர் பாராட்டிய வீடியோவை பார்த்தோம். வளர்ந்துட்டே இருக்கீங்க எப்படி என ஆச்சரியமாக கேட்கின்றனர்.

என் குடும்பத்தோட சப்போர்ட். ஆரம்பிக்க போறப்ப தான் பயமா இருக்கும். தொடங்கிட்ட எல்லாம் அதுவே நடக்கும் என்கிறார். அதுமில்லாமல் நம்ம இடியட், ஒன்னுமே தெரியாதுனு சொல்றவங்க தான் நமக்கு மோட்டிவேட்டர் என்றும் கூறுகிறார். பின்னர் ஹோட்டல் தொடங்கிய விஷயத்தையும் கூற அருகில் இருந்த கோபிக்கு கடுப்பாகி விடுகிறது.

இதையும் படிங்க: கமல் – ஸ்ரீவித்யா காதலை நிராகரிக்க இந்த காரணம் தான் இருந்தது!… ஸ்ரீவித்யா அண்ணி சொன்ன ரகசியம்..

ரூமில் அடைந்து கிடக்கும் அமிர்தாவை வெளியில் போகலாம் எனக் கேட்கிறார் எழில். வரலை எனக்கு பயமா இருக்கு என அவர் கூறிவிட அதெல்லாம் இல்லை. நீ வரணும் எனச் சொல்லி நிலாவை கேட்க வைத்து ரெடியாக சொல்லி அவரும் ரெடியாக கிளம்புகிறார். ரூமுக்கு வருகிறார் கோபி.

ராதிகாவிடம் எதாவது பேசு பேபி எனக் கேட்க ஆபிஸ் போகலை என்கிறார். இதுக்கு இவ பேசாமையே இருக்கலாம் என மனதில் நினைத்து கொள்கிறார். பின்னர் போகணும் கிளையண்ட் மீட்டிங் இருப்பதாக சொல்லி சமாளிக்கிறார். ஆறு மணிக்கு ஆபிஸுக்கு வரேன் என்கிறார். இதில் ஷாக்கான கோபி ஏன் எனக் கேட்க ஒரு ரிசப்ஷனுக்கு போகணும்.

மண்டபம் உங்க ஆபிஸ் பக்கம் தான் எனக் கூற நீ வந்து பிக்கப் செஞ்சா நல்லா இருக்காது. நானே வரேன் என்கிறார் கோபி. எதுக்கு இந்த அலைச்சல் என ராதிகா கேட்க அதெல்லாம் இல்ல என சமாளித்து விடுகிறார். ஆபிஸ் பூட்டி இருக்க விஷயம் தெரிஞ்சிது எனக்கு தான் ரிசப்ஷன் என புலம்பிக்கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: பெரிய பில்டப்பு கொடுத்து புஸ்ஸுனு போன கதையால இருக்கு! ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த சிறகடிக்க ஆசை!…

தொடர்ந்து வெளியில் சென்று வந்தவர் பெயர் வைக்கும் நிகழ்வு எப்போ வைக்கலாம் எனப் பேச ஜெனி செழியனை கேட்காம எப்படி முடிவு எடுப்பீங்க என்கிறார். நாளைக்கு பாரு அவன் உன்னை பத்தி என்னெல்லாம் குறை சொல்றானு எனச் சொல்லி விட்டு அவர் செல்ல வருத்தத்துடன் ஜெனி அமர்ந்து இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Published by
Akhilan

Recent Posts