இங்க என்னடா இரண்டு சங்கமம் நடக்குது!.. கோபிக்கு ஒன்னு, பாக்கியாவுக்கு ஒன்னா? அடடே!...

by Akhilan |
இங்க என்னடா இரண்டு சங்கமம் நடக்குது!.. கோபிக்கு ஒன்னு, பாக்கியாவுக்கு ஒன்னா? அடடே!...
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மீண்டும் கோமதி மற்றும் பாக்கியா குடும்பம் ஹோட்டலில் முட்டிக்கொள்கின்றனர். எழிலை சமாதானம் செய்து பாக்கியா கூட்டிச்சென்று விடுகிறார். இந்த பக்கம் ராதிகாவும், கோபியும் கிளம்பி குன்னக்குடிக்கு செல்வதாக ஈஸ்வரியிடம் சொல்கின்றனர்.

பத்திரமா போயிட்டு வாங்க என்கிறார். இனியாவை கூட வரீயா என ராதிகா கேட்க அவரும் ஜாலியா இருக்கும் எனக் கூறி கிளம்பி செல்கிறார். ராஜீ யோசித்துக்கொண்டே அமர்ந்து இருக்க அவரை பார்க்க கண்ணன் வருகிறார். என்னை ஏமாத்த நினைச்சா நான் தற்கொலை செஞ்சிக்கிட்டு உன் பெயரை எழுதி வச்சிருவேன் என மிரட்டுகிறார். பின்னர் தன் சித்தி வந்துவிட அங்கிருந்து ராஜீ சென்று விடுகிறார்.

இதையும் படிங்க: என் ராசா.. நீதான் என் புருஷன்!.. திடீரென எம்.ஜி.ஆரை கட்டிப்பிடித்த பெண்.. எப்போது நடந்தது தெரியுமா?..

கோபியை அண்ணன்கள் இருவரும் அமுக்கி பிடித்து அவரை வரவேற்கின்றனர். கோபி திணறி போக ராஜீ வருகிறார். அவரை பார்த்து ராதிகா உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தானே. முகமே சரியில்லை எனக் கேட்கிறார். பின்னர் ராஜீயின் சித்தப்பா பெரிய வீடு பிடிக்காம எப்படி இருக்கும் என்கிறார்.

இதையும் படிங்க: ஒருவழியா மாமா வந்தாச்சு!.. ரொம்ப சிரிக்காதீங்க விஜயா… அப்புறம் மொக்க வாங்குவீங்க…

செழியன் வேலைக்கு கிளம்ப அங்கு வருகிறார் ஜோசப். எங்க வீட்டு குழந்தைக்கு பேப்டிசம் வைத்து இருப்பதாக கூற மூவரும் ஷாக் ஆகின்றனர். ஈஸ்வரி கேள்வி பட்டோம் எனக் கூற தெரிஞ்சி இருந்தா இவ்வளவு தூரம் வந்து இருக்க மாட்டேன் என பதிலடி கொடுப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story