பழைய பொண்டாட்டி பின்னால போய் மொத்தமா பிசினஸ் போச்சா!... நடுத்தெருவில் கோபி!..

by Akhilan |
பழைய பொண்டாட்டி பின்னால போய் மொத்தமா பிசினஸ் போச்சா!... நடுத்தெருவில் கோபி!..
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கான்ஸ்டபிள் அமிர்தாவுடம் நீ கணேஷ் கூட போக விரும்புறீயா எனக் கேட்க அவர் இல்லை எனக் கூறிவிடுகிறார். இதனால் பதறிய கணேஷ் என்ன அமிர்தா வா நம்ம குடும்பமா வாழலாம் என பதற்ற ஆரம்பிக்கிறார். இடையில் வந்து எழில் நின்று விடுகிறார்.

உடனே போலீஸ்காரர் அந்த பொண்ணு சொல்லிட்டு என்கிறார். சார் அவ என் பொண்டாட்டி என்கிறார். நீ என்ன வேலை பாக்குற எனக் கேட்க இப்போ வேலை எதுவும் இல்ல என்கிறார். எழிலிடம் நீ என்ன வேலை பார்க்கிற எனக் கேட்க நான் புரோடக்‌ஷன் கம்பெனியில் டைரக்டராக இருக்கேன் என்கிறார். பாரு இவன் நல்ல வேலையில் இருக்கான்.

இதையும் படிங்க: ஆசையாக வாய்ப்பு கேட்ட ரஜினி.. கைய விரிச்ச பாரதிராஜா.. கடைசியில நடந்தது இதுதான்!…

அவனால இவங்களை பார்த்துக்க முடியும். அந்த குட்டி பொண்ணு உன்ன பாத்து பயந்து ஓடிடுச்சு. உன்னை நம்பி எப்படி அவங்களை அனுப்ப முடியும். நீ நேரா போலீஸ் ஸ்டேஷன் வந்து உனக்கும் இவங்களுக்கும் சம்மந்தம் இல்லை என எழுதிக்கொடு என்கிறார். இதனால் அனைவரும் நிம்மதி அடைகின்றனர்.

நீங்களா என்ன போலீஸ் என கணேஷ் கடுமையாக கேட்க என்னையே மிரட்டுறியா. அப்போ இவங்களை என்ன மிரட்டி இருப்ப. எழிலிடம் தன் நம்பரை கொடுத்தவர். இனி இவனால பிரச்னை வந்தா எனக்கு கால் பண்ணுங்க. நீ வா என்னுடன் என அவரை அழைத்து சென்று விடுகிறார் போலீஸ். பின்னர் ஆபிஸில் கவலையுடன் அமர்ந்து இருக்கிறார் கோபி. அந்த நேரத்தில் செந்தில் அங்கு வருகிறார்.

என்ன ஆச்சு எனக் கேட்க எல்லாம் முடிஞ்சிது. என்னுடைய பல வருட கனவு முடிஞ்சி போச்சு. ஆபிஸை குளோஸ் செய்ய போறேன் என்கிறார். இதை தொடர்ந்து தன்னுடைய வேலை ஆட்களை அழைத்து பேசுகிறார். ஆபிஸ் நிலைமை உங்க எல்லாருக்குமே தெரியும். இனிமே இந்த ஆபிஸ் இல்லை என்கிறார்.

இதையும் படிங்க: ஹீரோவை தேடித்தேடி ஓய்ந்து போன பாரதிராஜா!.. விபத்து மூலம் கிடைத்த ஹீரோ.. இது நவரச நாயகன் கதை!..

என்ன சார் இப்படி திடீரென சொல்லுறீங்க? எங்களுக்கும் குடும்பம் இருக்குல. ஏற்கனவே 2 மாத சம்பளம் பாக்கி எனக் கூற ஒரே மாதத்தில் கொடுத்து விடுகிறேன். என்னை நம்புங்க என்கிறார். உடனே ஆபிஸே காலி ஆகிவிடுகிறது. வீட்டில் செல்வியுடன் கவலையாக பேசிக்கொண்டு இருக்கிறார் பாக்கியா.

அந்த நேரத்தில் அங்கு வரும் எழில் அந்த அங்கிள் கால் செஞ்சாருமா. வா போய் அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்திரலாம் என்கிறார். இப்போ இருக்க நிலைமைல இது தேவையா? என் பிள்ளைங்க வாழ்க்கை சரியாகட்டும் எனக் கூறுகிறார். ராமமூர்த்தி எல்லா குடும்பத்துலையும் பிரச்னை இருக்கத்தான் செய்யும்.

இது உன் லட்சியம். முதல இதை பாரு என்கிறார். நீங்களும் வாங்க மாமா எனக் கேட்க சரிமா என எல்லாரும் கிளம்புகின்றனர். ஆபிஸில் வெறுத்துபோய் நிற்கும் கோபியிடம் நீ முத வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுடா. அப்புறம் என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம் என்கிறார். இதை எப்படி அம்மாக்கிட்ட சொல்லுவேன்.

அவங்க தாங்கிக்கவே மாட்டாங்கடா என்கிறார். ராதிகாக்கிட்ட சொன்னா கவலைப்படுவா.அதிர்ச்சியாகிடுவா என கோபி புலம்பிக்கொண்டே இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: மண்வாசனை படம் பார்த்து கமல்ஹாசன் செய்த வேலை!.. நெகிழ்ந்து போன நடிகை!..

Next Story