குடிச்சிட்டா கோபிய கைலயே பிடிக்க முடியாதே!... இதுக்கே கடுப்பான ராதிகா.. ஆபிஸ் விஷயம் தெரிஞ்சா?!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி குடித்துவிட்டு பம்மிக்கொண்டே வீட்டுக்குள் நுழைகிறார். அப்போ அங்கிருக்கும் ஈஸ்வரி கோபியை வந்து சோபாவில் உட்கார சொல்கிறார். ராமமூர்த்தி ஒரு சந்தேகத்துடனே கோபியை பார்க்கிறார். ஈஸ்வரி பேசிக்கொண்டே இருக்க கோபி உளருவோம் என்பதால் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்கிறார்.
அப்போ அங்கு வரும் ராதிகா டிபன் எடுத்து வைக்கட்டுமா என்று கேட்கும்போது, கோபி அப்படியே உட்கார்ந்து இருக்கிறார். ராதிகாவுக்கு அவர் குடித்துவிட்டதாக சந்தேகம் வர அதை சைகையில் கேட்கிறார். தொண்டை வலி என சமாளிக்கிறார். உடனே ஈஸ்வரி அப்போ சுடுத்தண்ணி வச்சி வாய் கொப்பளிப்பா என அறிவுரை சொல்கிறார். இருந்தும் ராதிகா ரூமுக்கு வாங்க என்று கூப்பிட ஈஸ்வரி அதட்டி உட்கார வைத்துவிடுகிறார்.
இதையும் படிங்க: ரேர் வீடியோ.. கிரிக்கெட் விளையாடும் போது டென்ஷனான விஜய்!.. செம கோபக்காரரா இருப்பாரோ தளபதி!..
மீண்டும் ராதிகா கண்ணாலையே கூப்பிட ஈஸ்வரி மீண்டும் கடுப்பில் உட்கார வைக்கிறார். ஒரு கட்டத்தில் ராதிகா கோபத்தில் ரூமுக்கு சென்றுவிடுகிறார். கோபி சுடுத்தண்ணி வைக்க கிச்சன் சென்று பைப் தண்ணியை பிடித்து ஒரு அடுப்பை ஆன் செய்துவிட்டு இன்னொரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணி சுட்டுறுச்சா எனச் செக் செய்கிறார்.
அங்கு வரும் ராதிகாவிடம் எவ்வளோ நேரம் தண்ணி சுடவே இல்லை எனக் கேட்க ஆன் செய்து இருக்கும் அடுப்பில் கை வைத்து இதில் வச்சா தன சுடும் என்கிறார். அவரை மல்லுக்கட்டி ரூம் போய் இப்படியே ஏன் குடிச்சிட்டு வரீங்க. உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா கஷ்டப்படுவாங்க தானே என்கிறார். என் புள்ளைங்க லைஃப் நினைச்சு குடிச்சேன். சரி குடிச்சதால எல்லாம் மாறிட்டா என்கிறார்.
இதையும் படிங்க: கடைசி நேரத்துல சிக்கல்!.. புரமோஷன் பண்ணது எல்லாம் வீணா?.. அந்த படம் வெளியாகாதாம்?..
இன்னொரு கஷ்டமும் இருக்கு எனக் கேட்க அதை எப்படி என் வாயால சொல்வேன் என்கிறார் கோபி. எந்த வாயால குடிச்சீங்களோ அந்த வாயால சொல்லுங்க. கோபி உளருவதாக நினைத்த ராதிகா தூங்குங்க எனச் சொல்லிவிட்டு செல்கிறார். இதுக்கே இந்த திட்டு இதுல ஆபிஸ் விஷயம் தெரிஞ்சா எனக்கு சங்கு தான் என புலம்புகிறார் கோபி. ஜெனிக்கு குப்பையில் இருக்கும் பொக்கே தெரிய அதில் இருக்கும் கடிதத்தை படிக்க ட்ரை செய்கிறார்.
ஆனால் ஜோசப் வந்து அந்த லெட்டரை இன்னும் சுக்குநூறாக கிழித்து போட்டு விடுகிறார். நீ ஏன் இவ்வளோ வீக்கா இருக்க? இதுக்காக தான் அவன் இதை செய்கிறான் எனச் சொல்லி செல்கிறார். ஜெனி வருத்தப்பட்டு அழுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.
இதையும் படிங்க: டேய் இது குடும்பமா இல்ல மென்டல் ஆஸ்பிட்டலா? எப்ப பாத்தாலும் தப்பை முத்து மேலயே போடுறீங்க?