More
Categories: Cinema News latest news television

ராதிகாவிடம் அடி இடியா விழுதே கோபி உங்களுக்கு!… திருந்துங்க திருந்துங்க…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜெனியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு காரில் செல்கிறார் செழியன். இடையில் குழந்தை அழுக பதறி அடித்து காரை ஓரம் கட்டி நிறுத்துகிறார். எதுக்கு குழந்தை அழுதுச்சு எனக் கேட்க ஜெனி இப்போ காரை எடுங்க என்கிறார்.

ஏன் வாங்க போங்கனு கூப்பிடுற ஜெனி எனக் கேட்க காரை எடுங்க என்கிறார். இல்லை நான் இறங்கி போயிடுவேன் எனக் கூற செழியன் பதறி காரை ஸ்டார்ட் செய்து விடுகிறார். வீட்டில் வந்து ஜெனியை விட அதை பார்த்து ஜோசப் கடுப்பாகி விடுகிறார்.

இதையும் படிங்க: அஜித் துடிச்ச துடிப்பு இருக்கே! கண்ணார பார்த்து கதறிய நடிகர்.. ‘தல’க்குள்ளே இவ்ளோ ரணமா?

அதை தொடர்ந்து, ஜெனி சமாதானம் செய்து செழியனை அனுப்பி விட்டு வீட்டுக்குள் வருகிறார். ஜோசப் உடனே உனக்கு அடுத்த கல்யாணம் செஞ்சி வைக்கணும் எனக் கூறுகிறார். இதனால் கடுப்பாகும் ஜெனி அதெல்லாம் முடியாது என்கிறார். இதனால் மரியம், ஜோசப் அதிர்ச்சி ஆகி நிற்கின்றனர்.

பார்க்கில் செந்திலை பார்க்கும் கோபி அவரிடம் திட்டு வாங்குகிறார். கோபி கொஞ்சம் பொறுமையா கேளு எனக் கூற இனிமே உன் பேச்சையே கேட்க மாட்டேன் என்கிறார். என் மூஞ்சில முழிக்காத எனத் திட்டிவிட்டு செல்கிறார். வீட்டில் ராதிகா ரெஸ்டாரெண்ட் திறப்பு புகைப்படங்களை பார்த்து கொண்டு இருக்கிறார். 

இதையும் படிங்க: இப்படி எல்லாரும் பாட்டு பாடிட்டு இருக்கீங்களே… கடுப்பான விஜயா, ரோகினி… நாங்களும் தான்!…

அதில் ஒரு க்ரூப் போட்டோவில் கோபி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின்னர் கோபி வீட்டுக்கு வர அவரிடம் எல்லா போட்டோக்களை காட்டி கொண்டு உள்ளார். அப்போ க்ரூப் போட்டோவை காட்ட கோபி இனியா நான் இல்லனு மார்ப் பண்ணிருப்பா எனச் சமாளிக்கிறார்.

இதில் கடுப்பாகும் ராதிகா, கோபியை போட்டு அடிக்கிறார். இல்ல மினிஸ்டர் வரலைனு கவலையில இருந்தாங்க. அதான் போய் பார்த்தேன் எனக் கூறி சமாளிக்க அந்த நேரத்தில் அங்கு இனியா வருகிறார். இருவரும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பதை பார்ப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: எல்லாத்துக்கும் முன்னோடியா இருக்கும் கமலுக்கே தண்ணி காட்டிய விஜய்! மரண பயத்தை காட்டிய தளபதி

Published by
Akhilan

Recent Posts