Connect with us
ajith

Cinema News

அஜித் துடிச்ச துடிப்பு இருக்கே! கண்ணார பார்த்து கதறிய நடிகர்.. ‘தல’க்குள்ளே இவ்ளோ ரணமா?

Actor Ajith: தமிழ் சினிமாவில் இரும்பு மனிதன் என்றே அஜித்தை சொல்லலாம். அந்தளவுக்கு உடம்பு முழுவதும் ப்ளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்து இந்த நிலையிலும் படங்களில் நடித்து வருகிறார். முதுகில் மட்டும் கிட்டத்தட்ட 32 அறுவை சிகிச்சை செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இருந்தாலும் தொடர்ந்து தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்.

ஆனால் அஜித்தை பற்றி சமீபகாலமாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவருடைய கேரக்டரே அப்படித்தான் என்றாலும் கடந்த இரண்டு மாதமாக நாள்தோறும் செய்திகளில் அஜித்தை பற்றிய செய்திதான் வெளிவருகின்றது. இப்படியும் ஒரு நடிகர் இருப்பாரா? என்று ஒரு சில பிரபலங்களும் கேட்டு வருகின்றனர். யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை. ரசிகர்களை சந்திப்பதும் இல்லை போன்ற காரணங்களால் அஜித்தை விமர்சித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: இப்படி எல்லாரும் பாட்டு பாடிட்டு இருக்கீங்களே… கடுப்பான விஜயா, ரோகினி… நாங்களும் தான்!…

சமீபத்தில்தான் அஜித்துக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை நடந்தது. அதுவும் பேசுபொருளாக மாறியது. ஆனால் அந்த சம்பவம் எதுவும் நடக்காத மாதிரி ஆப்ரேஷன் முடிந்து மறுநாளே அஜித் தன் மகனின் பள்ளி ஆண்டுவிழாவில் இருக்கும் மாதிரியான வீடியோக்கள் வைரலானது. இந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கர் அஜித்தை பற்றி கூறிய ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதாவது ஷூட்டிங் முடிந்து பெரும்பாலும் நடிகர்கள் வெக்கேஷனுக்கு செல்வார்கள். ஆனால் அஜித் மட்டும்தான் சூட்டிங் முடிந்து ஆப்ரேஷனுக்கு செல்வார். அந்தளவுக்கு மனுஷன் வலியால் அவதிப்படுவதை தன் கண்ணால் நேரிடையாகவே பார்த்திருக்கிறேன் என கூறினார். விஸ்வாசம் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அஜித் அவருடைய வலியை யாரிடமும் சொல்லமாட்டாராம்.

இதையும் படிங்க: 100 கோடி வசூல் நாயகியை தட்டித்தூக்கிய விஷ்ணு விஷால்!.. லால் சலாம் தோல்விக்கு பதிலடி கொடுப்பாரா?

உடம்பில் ஏகப்பட்ட இடங்களில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் ஒரு சில நேரம் வலி ஏற்படுமாம். அந்த வலியை தாங்கிக் கொண்டு தனியாக ஒரு அறைக்கு சென்று கத்தி அழுவாராம். அதை நானே பார்த்திருக்கிறேன் என ரோபோ சங்கர் கூறினார். அடிச்சு தூக்கு பாடலில் கடைசி ஒரு நிமிடம் தொடர்ந்து விடாமல் ஆடியிருப்பார் அஜித். அந்த காட்சி படமாக்கப்பட்டதும் முட்டில் இருந்த எலும்பு விலகி விட்டதாகவும் அதை அப்படியே பிடித்து கொண்டு அஜித் கத்தினார் என்றும் ரோபோ சங்கர் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top