Connect with us

Cinema News

100 கோடி வசூல் நாயகியை தட்டித்தூக்கிய விஷ்ணு விஷால்!.. லால் சலாம் தோல்விக்கு பதிலடி கொடுப்பாரா?

இந்த ஆண்டு மலையாள சினிமாவுக்கு அடுத்தடுத்து 100 கோடி வசூலை 3 பெரிய படங்கள் கொடுக்கும் என தெரிகிறது. ஏற்கனவே மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 150 கோடி வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதற்கு முன் பிப்ரவரி 9ம் தேதி லால் சலாம் படத்துக்கு போட்டியாக வெளியான பிரேமலு திரைப்படமும் 100 கோடி வசூலை நேற்று இரவு தொட்டு விட்டது.

இதையும் படிங்க: கேப்டனை கடைசியாக சந்தித்த போது இதைக்கேட்டேன்!.. அழுதுவிட்டார்… கண்கலங்கிய மன்சூர் அலிகான்..

பிரேமலு படத்தில் ஹீரோயினாக நடித்த மமிதா பைஜூ மீது தென்னிந்தியர்கள் திடீரென பயங்கர கிரஷ்ஷாகி விட்டனர். பிரேமலு படத்தின் ஹீரோயின் மமிதா பைஜு பாலா இயக்கத்தில் சூர்யா வணங்கான் படத்தில் நடித்து வந்த போது கீர்த்தி ஷெட்டியுடன் இணைந்து இன்னொரு ஹீரோயினாக நடித்து வந்தார்.

ஆனால், சூர்யா விலகியதும் பாலாவிடம் தனியாக அடி வாங்க முடியாது என நினைத்த கீர்த்தி ஷெட்டியும், மமிதா பைஜுவும் அந்த படத்தில் இருந்து ஆளவிடுடா சாமி என ஓட்டம் எடுத்து விட்டனர்.

இதையும் படிங்க: ஜி.வி. பிரகாஷ் பஞ்சாயத்தை கூட்டப் போறாரு!.. தங்கலான் இயக்குநர் பா. ரஞ்சித்தின் பளிச் பேச்சு!..

இந்நிலையில், மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆக சூப்பரான ரூட்டை மமிதா பைஜு பிடித்திருக்கிறார். அமலா பால், ஐஸ்வர்யா லட்சுமி என தொடர்ந்து பல கேரள நடிகைகளை ஹீரோயினாக மாற்றி வரும் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ராட்சசன் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் மமிதா பைஜு தான் ஹீரோயின் என்கிற சூப்பரான தகவல் வெளியாகி இருக்கிறது.

லால் சலாம் படத்துடன் மோதிய பிரேமலு படம் வசூலில் மிகப்பெரிய வெற்றிப் பெற காரணமே அதன் ஹீரோயின் தான் என்பதால், அடுத்த பிளாக்பஸ்டருக்கு தயாராகி உள்ள விஷ்ணு விஷால் மமிதா பைஜுவை ஹீரோயினாக ஆக்கி விட்டார் என்கின்றனர். இந்த வாரம் தமிழில் பிரேமலு வெளியாக உள்ளதால் கோலிவுட் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தான்.

google news
Continue Reading

More in Cinema News

To Top