சமையல் பிசினஸுக்குள் இறங்கும் கோபி!... இனி யார் ஜெயிக்க போறாங்க கோபியா? பாக்கியாவா?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி கிளவுட் கிச்சன் தொடங்க இருப்பதாக கூறுகிறார். அதைக் கேட்ட ஈஸ்வரி அப்படின்னா என்ன என கேட்க அது குறித்து விளக்கம் தருகிறார் கோபி. இதையெல்லாம் சமையல் அறையில் அமர்ந்து எழிலும் பாக்யாவும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து சமையல் அறைக்குள் வரும் கோபி என்ன பார்த்து என்ன கேள்வி கேட்ட ஒரு ரெஸ்டாரண்டில் வேலை பார்க்க வரவான்னு கேட்டல. அத நான் மறக்கவே மாட்டேன் என்கிறார். பின்னர் எழில் எங்க அம்மாவுக்கு போட்டியா இந்த பிசினஸ் தொடங்கறீங்களா என கேட்கிறார்.
எனக்கு பிசினஸ்ல 25 வருஷ அனுபவம் இருக்கு. உங்க அம்மா இது வரை ஒன்னத கூட உருப்படியா செஞ்சது இல்லை. எனக்கெல்லாம் அவ போட்டியா. நான்லாம் ஒரு ஆளா கூட அவளை மதிக்கல என்கிறார். இதை பார்த்த பாக்யா சரி விடுடா நம்மள பாத்து இன்ஸ்பயர் ஆகி இந்த விஷயத்தை பண்றாங்க என்கிறார்.
இன்ஸ்பையரா மண்ணாங்கட்டி இருட்டேட்டா ஆகுது என்கிறார் கோபி. யார் ஜெயிக்கிறோம்னு பாக்கலாம் எனவும் கூறுகிறார். அதைத்தொடர்ந்து இரவு இனியாவும் பாக்கியாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்த நாள் காலை பாக்கியா அவசர அவசரமாக ரெஸ்டாரன்டிற்கு கிளம்பி சென்று கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் வரும் எழில் நான் கொண்டு போய் விடுகிறேன் என கூறி கிளம்புகின்றனர். அப்போது வரும் கோபி மற்றும் ராதிகா எல்லாரையும் கூப்பிட்டு ஹாலில் உட்கார வைக்கின்றனர். கிளவுட் கிச்சனுக்கு கிண்டியில் ஒரு இடம் பார்த்து விட்டேன் என்கிறார் கோபி.
அதைத்தொடர்ந்து வேலைக்கு வீட்டில் புளிக்குழம்பு வைக்கும் பெண்கள் இல்லை. முறையாக படித்த செப்களை வேலைக்கு அமர்த்திருப்பதாக கூறுகிறார். நாளைக்கே திறக்க இருப்பதாக கூற அனைவரும் அதிர்கின்றனர். இனியா யாரை வைத்து திறக்க போறீங்க டாடி எனக் கேட்கிறார்.
எந்த மினிஸ்டரும், செலிபிரிட்டியும் இல்லை. எங்க அப்பா அம்மாவை வைத்து இந்த ரெஸ்டாரண்டை திறக்க இருப்பதாக கூறுகிறார். பாக்கியா தனக்கு டைம் ஆகிவிட்டதாக கூறி ரெஸ்டாரண்டுக்கு கிளம்பி சென்று விடுகிறார். அவரை எழில் கூட்டி செல்வதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.