கடைசியில் இப்படி எல்லாரும் கோபியை அசிங்கப்படுத்துறீங்களே… வீட்டுக்கு வந்த ஜெனி…

by Akhilan |
கடைசியில் இப்படி எல்லாரும் கோபியை அசிங்கப்படுத்துறீங்களே… வீட்டுக்கு வந்த ஜெனி…
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மரியம் குழந்தை எங்க வீட்டுலையே இருந்துட்டா. அவளை விட்டுட்டு இருக்கவே முடியாது எனக் கலங்குகிறார். பாக்கியா நான் பார்த்துக்கிறேன். கவலைப்படாதீங்க எனவும் ஆறுதல் சொல்கிறார்.

செழியன் இனிமே எதுவும் தப்பு நடக்காம நான் பார்த்துக்கிறேன் எனவும் சொல்கிறார். அங்கிருந்து அவர் கிளம்ப ஜன்னலில் நின்று அதை கண்ணீருடன் பார்த்துக் கொண்டு இருக்கிறார். எல்லாரும் பாக்கியா வீட்டுக்கு வந்துவிடுகின்றனர். ஜெனி, செழியன் காரில் உட்கார்ந்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அந்த நடிகரா? செட் ஆகாது.. அஜித் நடிக்க மறுத்து அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம்

வீட்டுக்குள் வரும் பாக்கியா நேராக சமையலறைக்கு செல்கின்றார். எங்கே போன என ஈஸ்வரி கேட்க இருங்க அத்தை சொல்கிறேன் என ஓடிச்சென்று ஆரத்தி தட்டை எடுத்து கொண்டு வருகிறார். இதை பார்த்து ஈஸ்வரி, கோபி, ராதிகா வெளியில் வந்து பார்க்கின்றனர். அங்கு செழியன் மற்றும் ஜெனி நிற்கின்றனர்.

எல்லாரும் ஷாக்காக இனியா சந்தோஷப்படுகிறார். ஜெனிக்கு ஆரத்தி எடுக்க போக அப்போ ஜெனி என ராமமூர்த்தி கேட்கிறார். ஆமாம் மாமா நம்ம வீட்டுக்கே வந்துட்டா என்கிறார். கோபி இது நல்ல முடிவு தான் ஆனால் திடீர்னு ஏன் இந்த முடிவு என கேட்கிறார். செழியன் இது எல்லாத்துக்குமே காரணம் அம்மா தான் என்கிறார். இதை கேட்டு கோபியின் முகம் மாறிவிட இருந்தும் எல்லாம் நல்லதுக்கு தான் என பேசி மழுப்பி விடுகிறார்.

ராதிகா பேசி பிரச்னையை தீர்த்துக்கிட்டீங்களா எனக் கேட்க ஆமாம் என்கிறார் ஜெனி. ஈஸ்வரி அமைதியாகவே இருப்பதை பார்த்து நான் வந்ததுல உங்களுக்கு சந்தோஷம் இல்லையா பாட்டி என்கிறார் ஜெனி. நீ குழந்தை தூக்கிட்டு போயிட்டு நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் என ஈஸ்வரி கலங்க அதான் வந்துட்டால பாட்டி என்கிறார் செழியன். அவர் குழந்தையை வாங்கிக்கொண்டு சோபாவில் உட்கார்ந்து கொஞ்சுகிறார்.

இதையும் படிங்க: 200 நாட்கள் ஓடிய கேப்டன் விஜயகாந்த் படங்கள்… ஒரே ஆண்டில் 4 வெற்றிப்படங்கள்!..

குழந்தைக்கு பால் எல்லாம் ஒழுங்கா தரியா என்கிறார். உடனே ஜெனி உங்களுக்கு ரொம்ப தான் அக்கறை. அதான் செழியனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ண போனீங்களா என்கிறார். உனக்கு தான் உங்க அப்பா மாப்பிள்ளை பார்த்தார் என ஈஸ்வரி கேட்க நான் கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன் என்கிறார் ஜெனி. செழியன் நானும் பண்ணி இருக்க மாட்டேன் என்கிறார். இதனால் முழிக்கும் கோபி இப்போ இந்த விஷயத்தை பேசணுமா அதான் எல்லாம் சரியா ஆச்சு இல்ல விடுங்க என்கிறார். இதனுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

Next Story