ஒரே சீன் வேறு வேறு எபிசோட்… டைரக்டர் சார் நீங்க ஜவ்வா இழுக்குறீங்க தெரிதா?

by Akhilan |
ஒரே சீன் வேறு வேறு எபிசோட்… டைரக்டர்  சார் நீங்க ஜவ்வா இழுக்குறீங்க தெரிதா?
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஷாப்பிங் முடித்துவிட்டு சாப்பிட வருகின்றனர் கோபி மற்றும் இனியா. கோபி என்னை பிடிக்குமாடா எனக் கேட்க பிடிக்கும் என்கிறார் இனியா. பின்னர், குழந்தை பெத்துக்க போறீங்களா டேடி எனக் கேட்டு ஷாக் கொடுக்கிறார் இனியா. ஏன் இப்படி எனக் கேட்க காரில் குழந்தை பற்றி கேட்டீங்களேனு தான் என்கிறார்.

உனக்கு தம்பி பாப்பா வேணுமா? தங்கச்சி பாப்பா வேணுமா? எனக் கேட்க அது எப்படி நீங்க குழந்தை பெத்துக்க முடியும் டேடி என வாயை அடைக்கிறார் இனியா. பின்னர் கோபிக்கு கால் வர அதை பேச வெளியில் செல்கிறார். அப்போ விமல் அங்கு வந்து இனியாவுடன் பேசிக்கொண்டு உள்ளார். உடனே இனியா நீங்க பழனிசாமி சொந்தக்காரர் எனச் சொல்லிடாதீங்க எனச் சொல்கிறார்.

இதையும் படிங்க: ஒரே நாளில் ஊத்தி மூடிய அஜித்தின் ரீ ரிலீஸ் படங்கள்!.. ‘தல’ ஆட்டம் ஒரு நாள் கூட தாண்டலையே பாஸ்!..

ஓகே என விமல் சொல்ல அப்போ அங்கு வரும் கோபி தனியா இருக்க பொண்ணுக்கிட்ட என்ன பிரச்னை பண்ணுறீயா என சண்டைக்கு வருகிறார். இல்ல டேடி என விமல் அழைக்க என்ன டேடியா என்கிறார். சரி அப்பா என்கிறார் விமல். நடுவில் வரும் இனியா என் பிரண்ட்தான் அப்பா என்கிறார். இவன் தான் அந்த பத்து வயசு தம்பி இருக்கும் பிரண்டா என்கிறார்.

உடனே இனியா அதெல்லாம் இல்லை டேடி எனக் கூறுகிறார். விமல் சரி மாமா விடுங்க எனக் கூற முதல டேடி, அப்புறம் அப்பா இப்போ மாமாவா எனக் கடுப்பாகிறார். எங்க ஊரில் அங்கிள் எல்லாம் கூப்பிட மாட்டோம். மாமானு தான் அழைப்போம் என்கிறார். எந்த ஊருடா எனக் கேட்ட கோயம்புத்தூர் என்கிறார். அங்க காலேஜ் இல்லாமயா இங்க வந்த எனத் திட்டுகிறார். பின்னர் இனியாவை இவனோடலாம் சேராதே எனத் திட்டி அழைத்து செல்கிறார்.

இதையும் படிங்க: ‘பில்லா’ படத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்! 16 வருஷம் கழிச்சு வெளிச்சத்திற்கு வந்த உண்மை

இதையடுத்து எழில் குழந்தைக்கு பெயர் வைக்கும் பங்ஷனுக்காக டெக்கரேஷன் பொருட்களை வாங்கி வருகிறார். அப்போ என்ன பெயர் வைக்கலாம் எனப் பேச்சு வர ராகினி என்கிறார் செழியன். உடனே ஈஸ்வரி நான் தான் பெயர் வைப்பேன் என அடம்பிடிக்கிறார். ஜெனி கடுப்பில் செழியனை ரூமுக்குள் அழைத்து வருகிறார். எதுக்கு ராகினி என்ற பெயர் வைத்த என்க ராமமூர்த்தி என்ற பெயரில் இருந்து ரா வை எடுத்துக்கிட்டேன் என்கிறார்.

அப்போ மாலினி என்ற பெயரில் இருந்து னி-யை எடுத்துக்கிட்டியா என்கிறார். செழியன் நான் அப்படி யோசிக்கலை என்கிறார். எழில் அமிர்தாவும் பேசிக்கொண்டு இருக்க எனக்கும் குழந்தை வேண்டும் என்கிறார். ஆனால் அதில் சிக்கல் இருக்கு என்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story