உங்களுக்கு நல்லா தேவை தான் கோபி… ஈஸ்வரியால் தலையில் துண்டையே போட்டுட்டாரு!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் வீட்டிற்கு வந்ததும் கமலா மற்றும் ஈஸ்வரி மீண்டும் சண்டை இட்டுக் கொள்கின்றனர். ஈஸ்வரி கோபியிடம் அவளை நிறுத்த சொல்ல என கூறிக் கொண்டிருக்க அவர் நீங்க கொஞ்சம் அமைதியா இருங்கம்மா என்கிறார். சண்டை அவங்க போட்டாங்க. நீ என்ன அமைதியா இருக்க சொல்கிறாய் எனக் கேட்கிறார்.
நீங்க தான் தேவை இல்லாம பேசி சண்டை வளர்க்கிறீங்க. சரி கிச்சனுக்கு கூட்டிட்டு போனா அங்கேயும் பிரச்சனை பண்றீங்க. ஏற்கனவே ஒரு பிசினஸ் தொலைச்சிட்டு இப்பதான் கொஞ்சம் கையில காசு பார்க்கிறேன். இதுவும் போச்சுன்னா நடுத்தெருவில் தான் நிற்கணும் என்கிறார். இதை கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.
இதையும் படிங்க: இன்னும் பெட்டரா வேணும்!.. பாக்கியராஜ் சொன்னதில் கடுப்பாகி கத்திய இளையராஜா.. அந்த சூப்பர் ஹிட் பாட்டா!.
எல்லாரும் சொல்லியும் பேச்சைக் கேட்காம இங்க வந்ததுக்கு எனக்கு தேவைதான். இப்ப அங்க போனா எனக்கு மரியாதை இருக்காது. அதனால நான் எங்கேயாவது போறேன் என பெட்டியை தூக்கிக்கொண்டு ஈஸ்வரி கிளம்புகிறார். உடனே கோபி மன்னிச்சிடுங்க அம்மா. ஏதோ கோவத்துல பேசிட்டேன் என்கிறார்.
இனிமே உங்கள பத்தி இப்படி பேச மாட்டேன். என்னை விட்டுப் போகாதீங்க என சமாதானம் செய்து ரூமிற்கு அழைத்து செல்கிறார். பின்னர் கோபி தலையில் துண்டை போட்டுக்கொண்டு ஹாலில் உட்கார்ந்திருக்கிறார். அப்போ அங்க வரும் ராதிகா அவருக்கு காபியை கொடுக்கிறார்., எங்க அம்மா எல்லாரையும் அதிகாரம் செஞ்சே பழகிட்டாங்க. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க கூடாதா என்கிறார்.
ஆளும் இல்லை. அதிகாரமும் பண்ண முடியாது. இந்த பிரச்சினைக்கு ஒரே முடிவு அவங்களை உங்க வீட்டுக்கு அனுப்புறதுதான் என்கிறார் ராதிகா. அது மட்டும் என்னால் முடியாது என கோபி மறுத்து விடுகிறார். பின்னர் வீட்டில் பாக்கியா கடைக்கு கிளம்புகிறார். கிளம்பும்போது சில வேலைகளை அமிர்தா மற்றும் ஜெனி இடையே பிரித்துக் கொடுத்துவிட்டு செல்கிறார். பிரச்சினையை ஆச்சுன்னா எங்களுக்கு கூப்பிடு என ராமமூர்த்தி கூறி அனுப்புகிறார்.
இதையும் படிங்க: வேணாம்னு சொன்ன பாட்டுக்கு தேசிய விருது..! சாதித்துக் காட்டிய ஏவிஎம் படம்…
ஈஸ்வரி ரூமிற்கு வந்து கோபி காபி கொடுக்கிறார். அவர் வேண்டாம் எனக் கூறியும் பிடிவாதமாக அவரை குடிக்க வைக்கிறார். என்ன அப்படி சொல்லிட்ட இல்ல. இனிமே உனக்கு இங்க என்ன நடந்தாலும் கால் செய்ய மாட்டேன். இவங்க என்ன கொன்னா கூட உனக்கு கால் பண்ண மாட்டேன் என ஈஸ்வரி கூறுகிறார். கோபி அவரை சமாதானம் செய்துவிட்டு வெளியில் வர கமலா அங்கு பேச வருகிறார்.
நீங்க எதுவும் என்கிட்ட பேச வேண்டாம். அதுவும் ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை இந்த அட்வைஸ் கொடுக்குறீங்க. அதை செய்யாதீங்க என்கிறார். ராதிகா இங்கு நடக்கும் பிரச்சினையை நான் பார்த்துக்கிறேன். நீங்க போய் பிசினஸ பாருங்க. அதையும் தொலைச்சிட்டு வந்துறாதீங்க எனக் கூறி கோபியை அனுப்புவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.