கர்ப்ப விஷயத்தை சொல்ல தயாராகும் கோபி… வீட்டை விட்டு துரத்தும் முடிவில் பாக்கியா…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழில் அமிர்தாவிடம் எனக்கு இன்னும் சில கடமைகள் இருக்கு அது முடித்தவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார். பின்னர் வீட்டுக்கு வரும் கோபி ராதிகாவை பார்க்க செல்கிறார். சாப்டியா என கேட்க ராதிகா இல்லை என்கிறார்.
ராதிகா கோபியிடம் நீங்கள் சாப்பிட்டீர்களா எனக் கேட்க நான் நன்றாக சாப்பிட்டேன் என்கிறார் கோபி. அதானே உங்களுக்கு உங்களைப் பற்றி மட்டும் தான் கவலை என்கிறார். கோபி ராதிகாவை சமாதானம் செய்ய நாளை பங்க்ஷனுக்கு குழந்தைக்கு கிப்ட் வாங்கிட்டீங்களா என்கிறார்.
இதையும் படிங்க: அறிவிப்போடு நின்று போன ரஜினியின் திரைப்படங்கள்! மோதலில் முடிந்த திரைப்படத்தின் கதை தெரியுமா?
கோபி நீ சொன்ன மாதிரி செயினும் வளையலும் வாங்கிவிட்டேன் என்கிறார். நாளைக்கு வாந்தி எடுக்காம இருக்கணும் என கோபி கூற நான் வேண்டும் என்றா வாந்தி எடுக்கிறேன்.சீக்கிரம் இந்த விஷயத்தை வீட்டில் சொல்லுங்க என்கிறார். கோபியும் நாளை ஃபங்ஷன் முடிந்தவுடன் சொல்லிவிடுவதாக கூறுகிறார்.
எல்லோருக்கும் சாப்பாடு கொடுத்து படுக்க வைக்கும் பாக்கியம் நாளை பங்க்ஷனுக்கு தேவையான காய்களை உட்கார்ந்து கட் செய்து கொண்டு இருக்கிறார். அப்போ அங்கு எழில் மற்றும் அமிர்தா வந்து அவருக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றனர். பின்னர் எழிலிடம் உங்க அப்பா ஏன் இன்னும் இங்கே இருக்காரு என்கிறார் பாக்கியா.
இதையும் படிங்க: தங்கலான் விக்ரமுக்கே டஃப் கொடுக்கும் கவின்!… நெல்சனின் முதல் படமே தாறுமாறா இருக்கே!…
அதான வீட்டை வித்துட்டு ஓனர் இன்னும் வீட்டிலேயே இருக்கிற கதை இங்கே தான் நடக்குது என்கிறார் எழில். நாளை பங்க்ஷன் முடிந்தவுடன் இது பற்றி பேசலாம் என்கிறார் எழில். அடுத்த நாள் வீட்டில் ஃபங்ஷனுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது மரியம் மற்றும் ஜோசப் இருவரும் வீட்டிற்கு வருகின்றனர். எல்லோரும் அவரை வரவேற்க ஈஸ்வரி அவர்களை பார்த்து முகத்தை திருப்பிக் கொள்கிறார்.
மரியம் ஜெனியை பார்க்க மாடிக்கு சென்று விடுகிறார். காலையில் இருக்கும் ஜோசப் மறுபடி எதுக்கு பேர் வைக்கிற பங்க்ஷன் என கடுப்பேத்துகிறார். எங்க வீட்டு வாரிசுக்கு எங்க முறையில பெயர் வைக்கிறதுதான் சரியா இருக்கும். எப்ப பேர் வைக்கணும் என்பதை நாங்க தான் முடிவு பண்ணுவோம் என ஜோசப்பிற்கு ஈஸ்வரி பதிலடி கொடுப்பதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.