Cinema News
ரஜினி கமலைத் தாண்டி பாலசந்தருக்கு பிடித்த நடிகர்! இவர யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க
Balachander: தமிழ் திரை உலகில் இயக்குனர் சிகரமாக பல நல்ல படங்களை படைத்த இயக்குனர் கே பாலச்சந்தர். எம்ஜிஆர் நடித்த தெய்வத்தாய் திரைப்படத்தில் வசனம் எழுதியதன் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு நுழைந்தார். இவருடைய நாடக குழுவான ராகினி ரெக்ரியேஷன் குழுவில் நடித்துக் கொண்டிருந்தவர் தான் நடிகர் நாகேஷ்.
அதன் காரணமாக நாகேஷுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவரை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் நீர்க்குமிழி. இந்த படத்தின் மூலமாக கே பாலச்சந்தர் இயக்குனராக அறிமுகமானார். அதுவரை யாரிடமும் உதவி இயக்குனராக பணி புரியாமல் நேரடியாகவே திரைப்பட இயக்குனராக அறிமுகமானவர்தான் பாலச்சந்தர். இவரால் அறிமுகப்பட்ட பல திரை பிரபலங்கள் இன்று மாபெரும் சாதனை படைத்த கலைஞர்களாக மாறி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: லால் சலாம் வசூல் இத்தனை கோடியா?.. உருட்டுனாலும் ஒரு நியாயம் வேணாமாடா.. சிக்கிய ரஜினி ரசிகர்!..
அதில் இரு ஜாம்பவான்கள் என்றால் ரஜினி கமல். அதன் காரணமாகவே எந்த ஒரு திரைப்பட விழா மேடை ஆனாலும் ரஜினி ,கமல் ஆகிய இருவரும் பாலச்சந்தரை மறக்காமல் அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் அவரை நினைவு கூர்ந்து பல தகவல்களை அவ்வப்போது கூறி வருவதை நாம் பார்த்திருக்கிறோம். இவர் இயக்கத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருக்கும் நிலையில் ஜெயலலிதா நடித்த ஒரே படமாக மேஜர் சந்திரகாந்த் என்ற திரைப்படம் தான் வெளிவந்திருக்கிறது.
மேலும் இவர் இயக்கிய இரு கோடுகள், தண்ணீர் தண்ணீர், ஒரு வீடு இரு வாசல், அச்சமில்லை அச்சமில்லை, அபூர்வராகங்கள், ரோஜா ஆகிய படங்களுக்கு மொத்தம் எட்டு தேசிய விருதுகள் கிடைத்து இருக்கின்றன. இந்த படங்கள் இவர் இயக்கத்தில் மற்றும் தயாரிப்பில் வெளிவந்த படங்களாகும். இந்த நிலையில் பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்தமான நடிகர் ஒருவரை பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
இதையும் படிங்க: யப்பா!.. யாரு சாமி இவ!.. தலைகீழாக நின்று தலையை சுற்ற வைக்கும் விஜய் பட நடிகை!.. வைரலாகும் பிக்!..
அதாவது பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய புது முகங்களிலேயே அவருக்கு பிடித்த புதுமுகம் என்றால் நிழல் நிஜமாகிறது படத்தில் காது கேளாத வாய் பேசாத கதாபாத்திரத்தில் நடித்த அனுமந்த் என்ற நடிகரை தான் அவருக்கு மிகவும் பிடிக்குமாம். இந்த செய்தி தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதைப் பற்றி முன்பே ஒரு மேடையில் பாலச்சந்தர் அவரே தன் வாயால் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.