தனுஷுக்கு முன்பே ஹாலிவுட் நடிகர்களுடன் சேர்ந்து நடித்த முதல் தமிழ் நடிகர்! எம்ஜிஆரை ஒரு வழி பண்ணியவர் ஆச்சே

by Rohini |
dhanush
X

dhanush

Actor Dhanush: கோலிவுட்டில் இன்று அண்ணாந்து பார்க்கக் கூடிய வகையில் அனைவராலும் கொண்டாடப்படுகிற நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார்.

ஆனால் முதலில் இவரை பார்த்த ரசிகர்கள் இந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு நடிக்க வந்துட்டான் என்றெல்லாம் விமர்சித்தார்கள். ஆனால் அதே ரசிகர்கள்தான் இன்று தலையில் வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

இதையும் படிங்க: தளபதி ஷூட்டிங்கில் ஷோபனாவை கதற விட்ட மணிரத்னம்… 20 வயசுல கஷ்டம் தானப்பா..!

அந்தளவுக்கு தன் கடும் உழைப்பை போட்டு மக்கள் மத்தியில் ஒரு சிறந்த இடத்தை பெற்று உச்சத்தில் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாம் ஆச்சரியப்பட வைக்கிறது. அதற்காக அவர் போடும் உழைப்பும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

சினிமாவிற்காக எதையும் செய்ய தயார் என்ற மன நிலைக்கே மாறியிருக்கிறார் தனுஷ். இன்றைய சூழலில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் ஒரு பிஸியான நடிகராகவும் இருந்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி , ஹாலிவுட் என உலகளவில் பேசப்பட்ட நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

இதையும் படிங்க: யாரும் இனிமே படத்தை பார்க்காதீங்க! அஜித்தை பற்றி பொங்கி எழுந்த தயாரிப்பாளர் – தல அப்படி என்ன செஞ்சாரு?

ஹாலிவுட் படத்தில் நடித்ததன் மூலம் தனுஷின் மீது ஒரு தனி மரியாதையே உருவானது , இந்த இளம் வயதில் எப்படி ஒரு வளர்ச்சி என அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஆனால் ஹாலிவுட் நடிகர்களுடன் சேர்ந்து நடித்த முதல் தமிழ் நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருந்தவர் நம்பியாரும் காமெடி நடிகர் ஏ.கருணாநிதியும் தானாம்.

மாடர்ன் தியேட்டர்ஸ் முதன் முதலில் ஹாலிவுட் நடிகர்களை வைத்து ஒரு ஆங்கிலப்படத்தை தயாரித்ததாம். அந்தப் படத்தில் நம்பியாரும் ஏ.கருணாநிதியும் சேர்ந்து நடித்தார்களாம். இதன் மூலம் ஹாலிவுட் நடிகர்களுடன் சேர்ந்து நடித்த முதல் தமிழ் நடிகர்களாக இவர்கள் தான் அறியப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: இதுக்கு ஏன்டா நான் ஃபீல் பண்ணனும்.. மணிரத்னம் படத்தில் கஷ்டப்பட்ட ரஜினிகாந்த்..!

Next Story