தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ். இவர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தவர். ஒரு படத்திற்கு கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதை நல்லா இல்லைனா அந்தப் படம் மக்களை சென்றடையாது. அந்தவகையில் தன்னுடைய நேர்த்தியான திரைக்கதையால் பல படங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார் கே.பாக்யராஜ்.
பாக்யராஜ் இந்த திரைத்துறைக்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. அதை கொண்டாடும் விதமாக சமீபத்தில் அவருக்கு விழா நடந்தது. அந்த விழாவிற்கு முதலமைச்சரிலிருந்து ரஜினி, கமல், எஸ்பி முத்துராமன், டி.ராஜேந்திரன், பார்த்திபன் என திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர். அப்போது ரஜினி பாக்யராஜுக்கு மாலை அணிவித்து ஒரு தங்க செயினையும் பரிசாக கழுத்தில் போட்டார்.
Also Read
அதை அங்கு கூடியிருந்த ரசிகர்கள் பெரிதாக கொண்டாடினார்கள். இந்த நிலையில் ரஜினி மேடையில் பேசும் போது பாக்யராஜுடனான தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்தார். அதில் மறக்க முடியாத ஒரு சம்பவத்தை ரஜினி அந்த மேடையில் நினைவு கூர்ந்தார். இதுவரை எங்கேயும் நான் இதை சொன்னதில்லை. அதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இதுதான் சரியான மேடை என அந்த சம்பவத்தை பற்றி சொன்னார்.
அதுமட்டுமில்லாமல் தன் வாழ்நாளில் மறக்கமுடியாத சம்பவம் என்றும் ரஜினி கூறினார். சிவாஜிக்கு மலேசியாவில் செவாலியர் விருது கொடுக்கப்பட்ட நேரம். அதை திரையுலகமும் அரசும் சேர்ந்து கொண்டாட வேண்டும் என சென்னை சேப்பாக்கத்தில் ஒரு விழா எடுத்திருக்கிறார்கள். அப்போது முதலமைச்சராக இருந்தவர் செல்வி ஜெயலலிதா. அந்த விழாவில்தான் ரஜினி ஜெயலலிதா பற்றி கடுமையாக பேசியிருந்தார்.
அது அங்கு இருந்தவர்கள் பல பேருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அனைவருமே அமைதியாகிவிட்டார்களாம். அந்த விழாவிற்கு ரசிகர்கள் உட்பட அதிமுக தொண்டர்களும் வந்திருந்தார்களாம். விழா முடிந்ததும் நடிகர்கள், நடிகைகள் என சேப்பாக்கத்தை சுற்றியுள்ள ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஓப்பன் ஜீப்பில் ஏறி நின்று ரவுண்ட் அடித்தார்களாம். அதில் ரஜினியும் ஏற முயல நடிகர் விஜயகுமார், ‘ரஜினி நீ வேண்டாம் என தோன்றுகிறது. ஏனெனில் பல பேர் உன் மேல் கோபத்தில் இருக்கிறார்கள்’ என ரஜினியிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் ரஜினி இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அந்த ஜீப்பில் ஏறி வலம் வந்திருக்கிறார். கூட்டம் அலை மோதியது. அந்த நேரத்தில்தான் பாட்ஷா படமும் ரிலீஸான நேரம். அதனால் ரஜினியை பார்த்த ரசிகர்கள் ரஜினியை சுற்றி வளைத்துக் கொண்டார்களாம். மற்ற நடிகர் நடிகைகள் எல்லாம் வெளியேறி விட்டார்களாம். ஆனால் ரஜினி மட்டும் மாட்டிக் கொண்டாராம். அந்த ரசிகர் கூட்டத்தில் தொண்டர்களா யாருன்னு தெரியவில்லை.
பல பேர் தன்னை கல்லால் அடித்ததாகவும் கில்லியதாகவும் ஜெயலலிதா பற்றி பேசியதற்கு திட்டியதாகவும் ரஜினி கூறினார். அப்போதுதான் பாக்யராஜ் ஓடி வந்து ரஜினியை பத்திரமாக அழைத்துக் கொண்டு வந்து போலீஸ் ஜீப்பில் ஏற வைத்திருக்கிறார். ஆனால் அந்த காவலரோ ஜெயலலிதாவிற்கு பயந்து ஜீப்பை எடுக்க மாட்டேன்னு சொல்லியிருக்கிறார். உடனெ பாக்யராஜ் ‘ஜீப் நம்பரை நோட் பண்ணிருக்கிறேன். ஒரு ஆர்ட்டிஸ்ட் பாதுகாப்பு என்பது இதுதானா? இவர் மட்டும் பத்திரமாக வீடு போய் சேரவில்லை என்றால் நாளைக்கு பெரிய விளைவை சந்திப்பீர்கள்’ என்று பாக்யராஜ் சொல்லியிருக்கிறார்.
அதன் பிறகுதான் ரஜினியை அந்த காவலர் போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ரஜினியை அவருடைய வீட்டில் பத்திரமாக போய் சேர்த்திருக்கிறார். இதை அந்த மேடையில் ரஜினி மிகவும் உருக்கமாக பேசி மற்றவர்களையும் உருக வைத்தார்.



