Cinema News
ஆக்சன் ரூட்டுக்கு மாறி மொக்கையான பரத்!.. வாய்ப்புக்காக வில்லனாக மாறிய சோகம்….
தனது முதல் திரைப்படத்திலேயே பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பரத். நடனத்தில் வல்லவராகவும் திகழ்ந்து வரும் இவரின் நடிப்பு திறமைக்கு தீனி போடும் விதமாகவே அமைந்தது அவரின் முதல் படமான “பாய்ஸ்”. மெகா ஹிட்டான அந்த படத்தை தொடர்ந்து வாய்ப்புகள் பரத்தின் வீட்டு வாசல் கதவை தொடர்ச்சியாக தட்ட துவங்கியது.
‘ஷங்கர் போன்ற இயக்குனர் இப்படி ஒரு படத்தை எடுக்கலாமா?’ என எதிர்மறை விமர்சனங்கள் எழத்துவங்கிய போதும், அந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கு அது பொன்னான வாய்ப்பாகவே பார்க்கப்பட்டது. ஜெனிலியா, சித்தார்த், மணிகண்டன், நகுல் உள்ளிட்ட இளைஞர் பட்டாளம் ‘பாய்ஸ்’ பட புகழ் என அவர்களை அடையாளப்படுத்தி கொள்ளும் அளவிற்கு உயர்த்தியது.
இதையும் படிங்க: கமலின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்கும் அசோக்செல்வன்! அதுக்குத்தான் இந்த கெட்டப்பா?
அடுத்து வெளிவந்த படங்கள் தொடர்ச்சியாக பரத்திற்கு மிக பெரிய வறவேற்பை பெற்றுக்கொடுத்தது. அதிலும் “காதல்” என்கின்ற திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அஜீத், விஜய், தனுஷ், சிம்பு போன்ற முன்னனி ஹீரோக்களுக்கு போட்டியாளர் கிடைத்துவிட்டாரோ? என்ற சந்தேகத்தை ரசிகர்களின் மனதில் ஏற்படுத்தும் அளவிற்கு வரலாற்று வெற்றியை பெற்றுத்தந்தது.
கூடல் நகர், வெயில் போன்ற படங்களும் வெற்றிப்பாதையில் பரத்தை அழைத்து செல்ல, குறுகிய நாட்களிலேயே பிரபலாமானார். மலையாளத்தில் கோபிகாவுடன் இவர் நடித்து வெளிவந்த ‘தி ஸ்டுடண்ஸ்’ மற்றும் அதில் இடம்பெற்ற “லஜ்ஜாவதியே” பாடலும் ஹிட் ஆனது. இதே படம் தமிழிலும் வெளியாகி அவருக்கு பெயரை பெற்றுத்தந்தது.
இப்படி இருக்க அதிர்ஷ்டலட்சுமி தன் வீட்டில் கூடாரம் போட்டு தங்க துவங்கியதாக நினைத்து அதிரடி ஆக்சன் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கினார். அப்படி இருக்கையில் பேரரசு இயக்கத்தில் வெளிவந்த “பழநி” படம் பஞ்சாமிர்தம் போல இனிப்பான முடிவைத்தரும் என நினைத்து காத்திருந்த பரத்திற்கு படத்தின் ரிசல்ட் பாவற்காய் கசப்பாக இருந்தது.
இதையும் படிங்க: குடும்பமே பட்டினி!.. தயங்கி தயங்கி உதவி கேட்கப்போன நாடக நடிகர்… எம்.ஜி.ஆர் செய்ததுதான் ஹைலைட்!…
“சிவகாசி” படத்தில் வரும் விஜய் போலவே நடை, உடையில் காட்சியளிக்கும் விதமாக “பழநி” படத்தில் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடிக்க, படத்தின் வசூலோ புஷ்பானமாகி போய் பரத்தை பதபதக்க வைத்தது. அவருக்கு அடுத்தடுத்து வரவிருந்த வாய்ப்புகளை தடுக்கும் விதமாகவும், அவரது சினிமா வாழ்க்கையை கேள்வி குறியாக்கும் விதமாகவும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்காமல் போனது.
தனது துவக்க காலத்தில் “செல்லமே” படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்தது இப்போது இவருக்கு உதவ ஆரம்பித்துள்ளது போலதான் தோன்றுகிறது. வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருவதால் தன்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வில்லன் அவதாரம் எடுக்க தயாராகி விட்டார் பரத். விரைவில் வில்லனாகவாவது இவரை பார்க்கலாம் என்ற ஆசையில் இவரது ரசிகர்கள் இப்போதிலிருந்தே காத்திருக்க துவங்கி விட்டனர்.