Cinema History
அப்போ ரஜினியை சரியாக கவனிக்கல!.. இப்போ வருத்தப்படுறேன்!.. புலம்பும் இயக்குனர்…
Actor Rajinikanth: எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல் திரைத்துறையில் சாதிப்பது என்பது கடினம். அப்படி சாதித்து காட்டியவர்தான் சூப்பர் ஸ்டார். இவர் தனது சொந்த முயற்சியினால் சினிமாவில் சாதித்து காட்டியவர். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் வில்லனாகவே நடித்து வந்தார்.
பின் பைரவி திரைப்படத்தில்தான் இவர் முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அபூர்வ ராகங்கள் திரைப்படம்தான் இவருக்கு சினிமாவில் நுழைய ஒரு அடிகல்லாக அமைந்தது. இப்படத்தில் இவர் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்திருந்தார்.
இதையும் வாசிங்க:மிரட்டிய சிவக்குமார்!.. அதிர்ந்துபோன அர்ஜூன்.. அவரு அப்பவே அப்படிதான் போலயே!..
பின் பல படங்களில் நடித்த ரஜினிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இப்படத்திலும் இவர் கமலுடன் இணைந்துதான் நடித்திருந்தார். பரட்டை எனும் கதாபாத்திரத்தில் தனது நடிப்பினை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும் இப்படத்தில் ஸ்ரீதேவி, காந்திமதி போன்ற பல பிரபலங்களும் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் கமல் நடிக்கும் போது அவர் முன்னணியில் இருந்த ஹீரோ. ரஜினியோ அப்போதுதான் வளர்ந்து வந்து கொண்டிருந்தார்.
இதையும் வாசிங்க:சிவாஜிகிட்டயே தனது வேலையை காட்டிய சந்திரபாபு… குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதான் போல…
ஆனால் இப்படத்தின் இயக்குனரான பாரதிராஜா தான் ரஜினியை இப்படத்தில் சரியாக கவனித்து கொள்ளவில்லை என மிகுந்த வருத்தத்துடன் கூறியுள்ளார். 16 வயதினிலே படத்தில் கமலுக்கு சம்பளமாக 35000 ரூபாய் கொடுக்கப்பட்டதாம். ஆனால் ரஜினிக்கோ 3000 ரூபாய்தான் பேசப்பட்டதாம். அதிலும் 2500 மட்டுமே கொடுத்தேன். மேலும் இப்படத்தில் கமல் மற்றும் ஸ்ரீதேவியை கவனித்த அளவு ரஜினியை கவனிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ரஜினி எங்கு தங்கினார் என்று கூட இயக்குனருக்கு தெரியாதாம். அதை கூட தான் கவனிக்கவில்லை என வருத்தபட்டு பேசியுள்ளார். ஆனால் ரஜினியோ இது எதை பற்றியும் கவலைபடாமல் தனது நடிப்பை மிக கட்சிதமாக செய்து வந்தாராம். அவர் அந்த நேரத்தில் அவ்வாறு இருந்ததுதான் தற்போது இந்த நிலைமையில் அவர் இருக்க காரணம் என பாரதிராஜா ரஜினிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் வாசிங்க:ரஜினியை அடிச்சு கைதட்டல் வாங்கும் ஒரே வில்லன் ரகுவரன்தான்! அவர் இடத்துல இவர வச்சா எப்படி?