Categories: Cinema News latest news

கடைசி வரை துணையாக நின்ற பவதாரிணி கணவர்… கடைசி நாளில் என்ன நடந்தது? உண்மைகளை உடைக்கும் உறவினர்

Bhavatharini: இளையராஜாவின் ஒரே மகளும், பாடகியுமான பவதாரிணியின் திடீர் இழப்பு பலரையுமே பாதித்தது. அவர் கணவருடன் விவகாரத்து என சிலர் சொன்ன நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக கணவர் சபரியின் அண்ணன் கொடுத்திருக்கும் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

பவதாரிணி கணவரின் அண்ணன் பேட்டியில் இருந்து, பவதாரிணி ரொம்பவே அமைதியான பொண்ணு. அதிர்ந்து கூட பேசமாட்டார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதே டிசம்பர்25 தான் எனக்கே தெரியும். கேன்சரை கூட அவருக்கு கடைசிக்கட்டத்தில் தான் சொன்னார்கள். ஆனால் என்ன கேன்சர் என்பது பவதாரிணிக்கு தெரியாது. அப்போலோவில் சேர்ந்ததால் தான் அதுவும் தெரிந்தது.

Also Read

இதையும் படிங்க: விஜய்தான் டார்கெட்டா?!. அஜித் போட்டோஸ் வெளிவரதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?!. அடங்கப்பா!

ரொம்பவே அவதிப்பட்டார். அவரினை காப்பாத்தவே முடியாது என்று கூறிவிட்டனர். 3 மாதம் மட்டுமே இருப்பார் என்பதால் கீமோ கொடுத்து கஷ்டப்படுத்த கூடாது என நினைத்தோம். அப்போ யுவனுக்கு தெரிந்த மருத்துவரை வைத்து தான் ஸ்ரீலங்கா சென்றார்கள். இறக்குறதுக்கு பத்து நாள் முன்னர் தான் அங்கு சேர்க்கப்பட்டார். கணவர் சபரியும் உடன் இருந்தார்.

பவதாரிணி மாமியார், நாத்தனாருடன் அடிக்கடி பேசிக்கொண்டு இருப்பார். பவதாரிணி கணவர் சபரி ரொம்பவே மன வருத்ததில் இருக்கார். கணவர், மனைவிக்குள் அத்தனை பாசம் இருந்தது. அவர் இழப்பை அவனால் தாங்கவே முடியவில்லை. யுவன் தான் ரொம்பவே உடைச்சி போயிட்டார். நிறைய ரெக்கார்ட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு மன நிம்மதி இல்லாமல் இருக்கிறார். ஸ்ரீலங்காவில் இருந்து கடைசி வரை இருந்த கணவரை போய் பிரிந்து இருக்காங்களா எனக் கேட்கிறார்கள்.

இதையும் படிங்க: விடாமுயற்சி ஃபர்ஸ்ட்லுக் வரது விஜய் கையில் இருக்கு!.. அஜித் போடும் ஸ்கெட்ச்!.. சிக்குவாரா தளபதி!.

மேலும், கேன்சரால் ஏற்கனவே கஷ்டப்படும் அவரை மேலும் கவலைப்படுத்த கூடாது என்பது தம்பியின் எண்ணம். பவதாரிணியை எடுக்கும் போது மயில் போல பாடலை பாடும் போது அங்கிருந்த எல்லாரும் அழுதுவிட்டோம் என்றும் குறிப்பிட்டார்.

Published by
Akhilan