Biggboss Tamil 7
சோதனை மேல் சோதனை… பிக்பாஸில் காலையிலேயே போட்டியாளர்களை தூங்க வைத்த பவா செல்லத்துரை..! என்னங்கையா!
BiggBoss Tamil7: தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய லைவில் எழுத்தாளர் பவா செல்லத்துரையால் செம காமெடியான ஒரு விஷயமே நடந்து இருக்கிறது. லைவினை மிஸ் செய்தவர்களுக்காக அந்த சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்த தொகுப்புகள் தான் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
கதை சொல்லி, எழுத்தாளர் என சிறப்புகளை பெற்றவர் தான் பவா செல்லத்துரை. இவரின் ஒரு புத்தகத்தினை கமல்ஹாசன் கடந்த சீசனில் பரிந்துரை செய்து இருந்தார். அவர் இந்த சீசனில் எண்ட்ரி ஆனபோது பலவிதமான கருத்துக்கள் நிலவியது.
இதையும் படிங்க:ஓவர் சீன் போடாதீங்க!.. நாங்க இல்லாம நீங்க இல்ல!.. விஜய் மீது காண்டான பயில்வான் ரங்கநாதன்…
இவருக்கு எதுக்கு இந்த வேலை, முதலில் எலிமினேஷனே இவர் தான் எனவும் கூறப்பட்டது. ஆனால் முதல் நாள் எபிசோட்டில் அவர் சொல்லிய கதையை கேட்ட பலரும் உருகிவிட்டனர். இதுக்காகவே இவர் இருக்கணும் என பவா செல்லத்துரைக்கு ஓட்டுகள் தொடர்ச்சியாக விழுந்தது.
ஆனால் அதெல்லாம் தனக்கு தேவையில்லை. நான் தான் முதல் விக்கெட் என முடிவெடுத்து விட்டார் போல. அந்த மாதிரி இரண்டு நாட்களாக அந்த கதையை தவிர மற்ற எந்த விதமான கன்டெண்ட்டினையும் கொடுக்கவே இல்லை. தூங்கி எழுந்து கொண்டு இருப்பதாகவே சில காட்சிகள் வருகிறது.
இந்நிலையில் இன்று காலை லைவில் கடந்த 40 நிமிடமாக பவா செல்லத்துரை கதை சொல்லி வருகிறார். ஆனால் முதல் கதை மாதிரி அது போட்டியாளர்களை கவரவே இல்லை. கிட்டத்தட்ட ஒரு சிலரை மற்ற அனைவரும் அரை துக்கத்தில் தான் இருந்தனர். ஒருவழியாக அவர் கதையை முடித்ததும், சிலர் டவுட் கேட்க அடேய் மறுபடியுமா என்ற ரீதியில் எக்ஸில் தளத்தில் அலற தொடங்கிவிட்டனர்.
இதையும் படிங்க:அடேய் நீங்க படிச்ச ஸ்கூல நான் ஹெட்மாஸ்டருடா… யுகிக்கவே முடியாத ஒரு ஸ்கெட்ச் தான் லியோ…
அதிலும் அவருக்கு பெருமையாக கருத்து சொல்கிறேன் பேர்வழி என்ற பெயரில் ப்ரதீப் எனக்கு உங்களை பிடிக்கும். ஆனா நீங்க எச்சி துப்புறீங்க, கடிச்சு பொதுல போட்டுறீங்க அத நான் செய்வேன். மற்றவங்க செய்ய மாட்டாங்க என சம்மந்தமே இல்லாமல் பேசினார். கிட்டத்தட்ட இது அவரை குத்தி காட்டுமாறு இருந்தது.
ஆனால் கொஞ்சமும் யோசிக்காத பவா செல்லத்துரை நான் என் இயல்பில தான் இருக்கேன். மத்தவங்களுக்காக நான் என்னைய மாத்திக்க முடியாது என முடித்துவிட்டார். ஒருவேளை பவா இறங்கி பேசினால் இன்னும் கன்டெண்ட் கிடைத்து சில வாரங்கள் தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.