Biggboss Tamil9: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி நடந்து வரும் நிலையில் இரண்டு வாரங்களை நிறைவு செய்ய இருக்கிறது. இந்நிலையில் திடீரென பிக் பாஸ் குழு ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த வாரம் துவங்கியது. கமல்ஹாசன் வெளியேறி விஜய் சேதுபதி உள்ளே வந்த இரண்டாவது சீசன் என்பதால் மேலும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது. கடந்த சீசனை போல இல்லாமல் இந்த முறை விஜய் சேதுபதி பொறுமையாக ஆட்டத்தை துவங்கி இருக்கிறார்.
அதுபோல கடந்த சீசன் போல் இல்லாமல் தெரியாத அறியாத முகங்களை நிறைய உள்ளே இறக்கி வித்தியாசமான ஆட்டத்தை களம் இறக்க பிக் பாஸ் டீ முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு இல்லாத பிரபலங்களும், அறியாத முகங்களும் உள்ளே வந்து தங்களுடைய ஆட்டத்தை துவங்கி இருக்கின்றனர்.
விறுவிறுப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டியாளர்கள் ஆர்வமில்லாமல் காதல் செய்து கொண்டிருப்பது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. போட்டியில் கவனம் இல்லாமல் கடமைக்கு வந்தது போல அவர்கள் நடந்து கொள்வதும் கேள்வியை எழுப்பி இருக்கிறது.
இந்நிலையில் எப்போதும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்பது ஐந்து ஆறு வாரங்களை கடந்து மட்டுமே நடக்கும். சில சீசன்களில் 70 நாளை கடந்து கூட வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வந்திருந்த விஷயமும் நடந்தது. ஆனால் இந்த முறை இதில் மிகப்பெரிய மாற்றம் நடந்திருக்கிறது.
அடுத்த வாரம் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சிக்குள் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எப்போதும் போல 4 முதல் 5 போட்டியாளர்கள் உள்ளே வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.