Categories: Entertainment News latest news

மேக்கப் மட்டும் தான் இருக்கு!.. மூஞ்சியையே காணோமே.. பிக் பாஸ் ஜூலியை கலாய்க்கும் ஃபேன்ஸ்!..

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ஜல்லிக்கட்டு வீராங்கனை ஜூலி அந்த நிகழ்ச்சியில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட போட்டியாளராக மாறினார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விஜய் டிவி சீரியல்களில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்ற பிக் பாஸ் ஜூலிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். ஆரம்பத்தில் சினிமா படங்கள் ஹீரோயினாக நடிக்கிறேன் என கிரின்ஜ் செய்து வந்த ஜூலியை பலரும் ட்ரோல் செய்தனர்.

இதையும் படிங்க: நான் கூப்பிட்டு வரல!.. அம்பானி கூப்பிட்ட உடனே போறியா!.. நயன்தாரா மீது செம கடுப்பில் ஷாருக்கான்!..

ஓவியாவுடன் பிக்பாஸ் வீட்டில் எதிரி போல ஜூலி சண்டை போட்டு வந்த நிலையில், சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த ரியாலிட்டி ஷோவில் இருவரும் சிறந்த தோழிகளாக ஒன்றாக இணைந்து விளையாடியது ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியது.

விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்காக பிக் பாஸ் ஜூலி கோட் சூட் உடையில் பக்காவாக பங்கேற்ற நிலையில், அதே உடையில் அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அப்படியொரு உருட்டு.. இப்படியொரு உருட்டு!.. இது எந்த படத்தோட காப்பின்னு தெரியலையே.. லியோ புது போஸ்டர்!..

அந்த போட்டோக்களுக்கு பிக் பாஸ் ஜூலியின் ரசிகர்கள் வாரே வாவ், செம அழகா இருக்கீங்க, எங்க கண்ணே பற்றும் போல இருக்கு என ஃபயர் ஏமோஜிக்களை தெறிக்க விட்டனர். ஆனால், வழக்கம்போல ஜூலியை கிண்டல் செய்து வரும் நெட்டிசன்கள் வெறும் மேக்கப் மட்டும்தான் இருக்கு மூஞ்சியையே காணுமே ஜூலி என மரண கலாய் கலாய்த்து உள்ளனர்.

லேட்டஸ்ட்டாக எடுத்த போட்டோக்களை பதிவிட்ட ஜூலி அதற்கு கேப்ஷனாக, ”Fashion is the armor to survive the reality of everyday life.” என பட்டையை கிளப்பும் கேப்ஷனையும் போட்டு ஏகப்பட்ட லைக்குகளை அள்ளி வருகிறார்.

Published by
Saranya M