Biggboss Tamil 8: அவங்களுக்கு 'வெஷத்த' வச்சு குடுத்துரலாம்... இதெல்லாம் ரொம்ப தப்பு?..

#image_title
Biggboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது 5௦-வது நாளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதில் ஆரம்பத்தில் நன்றாக விளையாடி வந்த முத்துக்குமரன் தற்போது பெரிதாக தடுமாறி வருகிறார். தொடக்கத்தில் விஜய் சேதுபதி கொடுத்த வார்னிங்கால் பெரிதாக இப்போது எல்லாம் வாய் பேசுவதில்லை. ஆனால் அவரின் உண்மையான நிறம் அவ்வப்போது வெளிவந்து விடுகிறது. அந்த வகையில் அவரின் சமீபத்திய கமெண்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிச்சனில் தீபக் உள்ளிட்டோர் சமைத்து கொண்டிருக்கும் போது முத்துக்குமரன் உள்ளிட்ட போட்டியாளர்கள் அவரிடம் பேசுகின்றனர். பேச்சின் போது பெண்கள் அணியில் இருந்து வர்ஷினி, சவுந்தர்யா, ஜாக்குலின் உள்ளிட்ட 5 போட்டியாளர்கள் பிக்பாசிடம் பீட்சா, பர்கர் கேட்டதை சொல்கின்றனர்.
இதையும் படிங்க: Biggboss Tamil: சோத்துல உப்பு இல்லையா? சவுந்தர்யா, சிவாவை தரக்குறைவாக பேசும் போட்டியாளர்கள்…
அப்போது ‘அவர்கள் மட்டும் என்ன ஸ்பெஷலா? தனியாக சென்று கோரிக்கை வைகின்றனர்.. பேசாம அதுல அவங்களுக்கு வெஷத்த வச்சு குடுத்துறலாம். இல்லனா பேதி மாத்திரை’ என முத்துக்குமரன் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அவர்கள் உணவு கேட்டால் இவரும் சென்று கேட்கலாம். அல்லது பேசாமல் வாயை வைத்துக்கொண்டு இருக்கலாம்.

#image_title
அதை விடுத்து விஷம் வைத்து கொடுக்கும் அளவிற்கு பேச வேண்டிய அவசியம் என்ன? என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர் நடந்துக்குறத எல்லாம் பாத்தா இந்த சீசனோட உண்மையான விஷ பாட்டில் இவர்தான் போல.
இதே முத்துக்குமரன் தான் கடந்து வந்த பாதை டாஸ்கில் ஒரு நேர சாப்பாட்டுக்கு தான் பட்ட கஷ்டங்களை உருக்கமாக எடுத்து கூறியிருந்தார். அதே சாப்பாட்டில் இப்போது விஷம் வைத்துக் கொடுப்பதை பற்றி பேசுகிறார் என்றால் அவரின் உண்மையான முகம் இப்போதுதான் தெரிய வருகிறது என்பது தான் நிஜம்.
இதையும் படிங்க: கதை சொன்ன கமல்!. எஸ்கேப் ஆன மணிரத்னம்!.. விருமாண்டி உருவான கதை!….