ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு! கடைசில சிட்டி ரோபோவா மாறிட்டாரே விஜய்சேதுபதி

by Rohini |
sethu
X

sethu

Biggboss Season 8: அனைவரும் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் சீசன் 8 ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கு முன் வெளியான 7 சீசன்களையும் கமல் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி இருந்தார்.

ஆனால் இந்த சீசனைப் பொருத்தவரைக்கும் கமலுக்கு ஏகப்பட்ட பணிச்சுமை இருப்பதினால் அவரால் இனிமேல் பிக் பாஸ் சீசனை தொடர முடியாது என்ற காரணத்தினால் இந்த சீசனில் இருந்து விஜய் சேதுபதி தொடர இருக்கிறார். கமலுக்கு என்று ஒரு தனி பாணி இருக்கும்.

இதையும் படிங்க: சினேகா ரோலில் முதலில் செலக்ட் ஆனவர் நயன்! படத்தை பார்த்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா?

போட்டியாளர்களை துவம்சம் செய்யும் அளவிற்கு அவருடைய கேள்வி ஞானம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அதே மாதிரி விஜய் சேதுபதியும் ஏதாவது ஒரு புது யுத்தியை கையில் எடுத்தால்தான் இனிவரும் சீசன்களை அவரால் வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும்.

அதனால் விஜய் சேதுபதி எந்த மாதிரியான யுக்திகளை பயன்படுத்தி போட்டியாளர்களை தன் பக்கம் கொண்டு வருவார் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: சினேகா கேரக்டரில் முதல் தேர்வு இந்த நடிகைதான்… கடைசியில் அந்த பிரபலம் சொன்னது என்ன தெரியுமா?

அதில் இந்த சீசனில் விஜய் சேதுபதியும் புதுசு. அதனால் அதனுடைய ஆட்டமும் புதுசாக இருக்கும் என்ற வகையில் சில பல யோசனைகளை மக்கள் விஜய் சேதுபதிக்கு சொல்லும் விதமாக இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. எப்படியெல்லாம் இருக்க வேண்டும் ?போட்டியாளர்களை எந்த மாதிரி கையாள வேண்டும்?

மனதில் ஈரம் இருக்கக் கூடாது. உண்டு இல்லை என வெளுத்து வாங்க வேண்டும் என பல அறிவுரைகளை விஜய் சேதுபதிக்கு பொதுமக்கள் சொல்லும் மாதிரியாக இந்த ப்ரோமோ வீடியோவில் வெளியாகி இருக்கிறது. கடைசியாக விஜய் சேதுபதி இந்த ப்ரோமோ வீடியோவில் பேசும்போது ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று சொல்லி கடைசியில் எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவாக நடிக்கும் ரஜினி எப்படிப்பட்ட ஒரு சிரிப்பை சிரிப்பாரோ அதே மாதிரி விஜய் சேதுபதியும் சிரிக்கிற மாதிரி இந்த வீடியோ முடிவடைந்து இருக்கிறது.

இதையும் படிங்க: இந்திய சினிமாவிலேயே மிகச்சிறந்த நடிகை! ‘சூர்யா 44’ல் களமிறங்க ரெடியாகிட்டாங்க

ஆனால் ப்ரோமோ வீடியோ மூலம் விஜய் சேதுபதி மக்களை ஈர்த்திருப்பார் என்று தான் தெரிகிறது. ஒரு வித்தியாசமான முறையில் இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. அதனால் இந்த சீசனும் எப்படிப்பட்ட ஒரு ஆர்வத்தை மக்களிடையே உண்டு பண்ணுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ லிங்க்: https://x.com/vijaytelevision/status/1833851931585868145

Next Story