Connect with us

Biggboss Tamil 7

பிரதீப்புக்காக பொங்கிய ஐசு நண்பர்கள்… ரெட் கார்ட் கொடுத்தும் அசிங்கப்படுத்திட்டாங்களே…

Pradeep Antony: ஒரே ஒரு ரெட் கார்ட்டால் இன்னமும் கூட அந்தப் பேச்சு பிக்பாஸ் தமிழ் டீமை விட்டு வைக்கவில்லை. அந்த வகையில் போட்டியாளர் ஐசுவின் நண்பர்கள் அவருக்கே ரெட் கார்ட் கொடுத்த சம்பவமும் சமீபத்தில் நடந்து இருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7ல் அனைவருக்கும் அதிர்ச்சியாக சம்பவம் பிரதீப் ஆண்டனிக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்ட் தண்டனை தான். கிட்டத்தட்ட பைனலில் கோப்பையை தட்டி செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு பெண்கள் பாதுகாப்பு என அனுப்பியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: இயக்குனர் சொன்னதை அப்படியே செஞ்ச ரஜினிகாந்த்… ஓவர் சீன் போட்ட இன்னொரு நடிகர்..

அதுவரை கொஞ்சம் நெகட்டிவிட்டி வைத்து இருந்த பிரதீப் ஆண்டனிக்கு எல்லாம் பாசிட்டிவ் ஆனது. அவருக்கு எதிராக இருந்த மாயா, பூர்ணிமா, ஐசு, நிக்சன், ஜோவிகா என அனைவரையும் புல்லி கேங்காக விமர்சித்தனர். கிட்டத்தட்ட அவர்களை வெளியில் அனுப்ப வேண்டும் என வோட்டிங்கில் கடுமை காட்டினர்.

எல்லாரும் முடிந்து டீம் பியில் இருந்த விஷ்ணு, மணி, அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் வரிசையாக பேட்டி கொடுத்துவிட்டனர். விசித்ரா, நிக்சன் வந்து இரண்டுக்கும் குறைவான பேட்டி கொடுத்து சமாளித்துவிட்டனர். மாயா, பூர்ணிமா, ஜோவிகா ஆகிய யாருமே இன்னும் பேட்டி என வரவில்லை.

இதையும் படிங்க:வாடிவாசலை ட்ராப் செஞ்சிடலாமா? தயாரிப்பாளரிடம் கேட்ட வெற்றிமாறன்.. திடீரென கிளம்பிய புது ஐடியா…

இதில் பெரிய குற்றச்சாட்டுகளுடன் வெளிவந்த ஐசு இன் ஷேம் எனக் கூறி ஒரு அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டு இருந்தார். பலநாட்கள் கழித்து சமீபத்தில் தான் பேட்டி கொடுத்து வருகிறார். அதில் நிறைய பேட்டிகளில் தான் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்தது தப்பு. அதில் நான் இருந்து இருக்க கூடாது எனவும் இறங்கி பேசி இருப்பார்.

மேலும், எனக்கு ரொம்ப பிடித்த போட்டியாளரும், நண்பரும் பிரதீப் தான் எனவும் கூறி இருப்பார். இந்நிலையில் ஒரு பேட்டியில் தொகுப்பாளர் ஐசு நண்பர்களிடம் சிகப்பு, மஞ்சள் கார்டை கொடுத்து எதை ஐசுக்கு கொடுப்பீர்கள் எனக் கேட்டனர். அவர்கள் பெரும்பாலும் ரெட் கார்ட்டே கொடுத்திருந்தனர்.

முதல் சில வாரம் நல்லா பண்ணாங்க. அடுத்த வாரங்களில் நல்லாலா பண்ணாங்க என நக்கலாகவும் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் வீட்டில் இருக்கும் மற்ற யாருக்கு கொடுப்பீர்கள் எனக் கேட்ட போது பிரதீப் ஆண்டனியை அனுப்பிய எல்லாருக்குமே ரெட் கார்ட் தான் கொடுப்போம் எனவும் தெரிவித்து இருந்தனர்.

இதையும் படிங்க: இயக்குனர் சொன்னதை அப்படியே செஞ்ச ரஜினிகாந்த்… ஓவர் சீன் போட்ட இன்னொரு நடிகர்..

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top