Bigg Boss Tamil 8
Biggboss Tamil: அடிச்சு காட்டுங்க… போர்க்களமான பிக்பாஸ் வீடு.. முட்டிக்கொள்ளும் போட்டியாளர்கள்
Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போர் அடிக்குது அந்த நிலையில் தற்போது ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. இதை அடுத்து இன்று முதல் பகுதியிலேயே நான்கு ப்ரோமோக்கள் வரை வெளியிடப்பட்டிருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் இன்று ஏஞ்சல் மற்றும் டிமன் நடத்தப்பட்டு வருகிறது. போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி ஏஞ்சலாகவும், இன்னொரு குழு பேயாகவும் வலம் வருவார்கள். அமைதியான தேவதைகளை கோபப்பட வைப்பது தான் டாஸ்காக அமைக்கப்பட்டிருக்கும்.
இதையும் படிங்க: கல்யாண வீடா, இழவு வீடா? விஜய்க்குத் தெரியாதா? ஏன் இப்படி செஞ்சாரு? பொங்கும் பிரபலம்
அந்த வகையில் இந்த முறை ஏஞ்சல்களை கோபப்படுத்தினாலோ, அழுக வைத்தாலோ அவர்களுடைய இதயம் அதை செய்த பேய்களுக்கு சென்று விடும். அதிக இதயங்களை கைப்பற்றும் போட்டியாளர்கள் நாமினேஷன் ஃபிரீ பாசை அடையலாம் எனவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் இன்று தொடங்கிய இந்த டாஸ்க் சற்று நேரத்திலேயே விறுவிறுப்பை அடைந்திருக்கிறது. தர்ஷிகா மற்றும் ஜாக்லின் இடையே சண்டை ஏற்பட்டு இருக்கும் நிலையில் கோவத்தின் உச்சியில் இருவரும் மாறி மாறி திட்டிக் கொள்வதாக புரோமோ வெளியிடப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: சந்திரமுகி 2 பிளாப் ஆனதுக்கு காரணமே லாரன்ஸ்தான்!.. உடைச்சி சொல்லிட்டாரே பி.வாசு!..
தேவதையாக இருந்த அன்சிதாவை சாச்சனா பச்சை மிளகாய் சாப்பிட வைத்த நிலையில் அவருக்கு தண்ணி கொடுக்காமல் தண்டனை கொடுக்கும் விதமாக நடந்து கொண்ட சம்பவம் சூடு பிடித்தது. இதில் கோபமடைந்த அன்சிதா கதவை திறங்க நான் போறேன் என கத்திக் கொண்டிருக்கிறார்.
மேலும் பிக் பாஸ் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் அன்சிதா சாச்சனாவை பார்த்து நீ குட்டி பிசாசு தான் என திட்டிக் கொண்டிருப்பதும் வைரல் ஆகி வருகிறது. பொதுவாக சாச்சனாவுக்கு சப்போர்ட் பேசும் விஜய் சேதுபதி இந்த விஷயத்தை எவ்வாறு கையாளுவார் என்பதையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பொதுவாக ப்ரோமோக்கள் காலையும் ஒன்பது மணி, மதியம் 12 மணி, மாலை 3 மணி என மூன்று ப்ரோமோக்கள் தான் வெளியிடப்படும். ஆனால் இன்று மதியம் 12 மணிக்குள் 4 ப்ரோமோக்கள் வரை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனால் இன்றைய எபிசோட் சூடு பிடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.