ரவீனா இத மட்டும் பண்ணாம இருந்திருந்தா அவதான் டைட்டில் வின்னர்! தங்கச்சிய இப்படி சொல்லிட்டாரே விஷ்ணு
Biggboss: விஜய் டிவியில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஷோவாக இருப்பது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான். உலகெங்கிலும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அதுவும் நடந்து முடிந்த ஏழாவது சீசன் பெரும் களோபரமாக முடிந்தது.
ஆரம்பம் முதலே பெரும் சண்டைகளில் ஆரம்பித்த இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து மக்களை எரிச்சலடைய வைத்தது என்றும் சொல்லலாம். இருந்தாலும் இந்த சீசனை பார்க்காமலும் இருக்க முடியவில்லை. அந்த அளவுக்கு உச்சக்கட்ட சண்டைகளிலேயே இந்த சீசன் பயணமானது என்றுதான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: நடிகர் சங்கத்தை நம்பி மோசம் போன சேரன்! த்ரிஷாவுக்காக பேசி வீணாப் போச்சோ?
இந்த சீசனில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாக மணிச்சந்திரா இரண்டாவது இடத்தை பிடித்தார். அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக விஷ்ணு இருக்க அவருடன் சேர்ந்து கூல் சுரேஷ், தினேஷ் , ரவீனா போன்றோர்களும் மக்கள் மனதை வென்றனர்.
இதில் ரவீனாவும் விஷ்ணுவும் அண்ணன் தங்கையாகவே பழகினார்கள். வீட்டில் இருந்து வந்த பிறகும் அவர்களுக்குள் ஒரு ஆழமான நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு தனியார் சேனல் ஒன்று ரவீனாவுக்காக ஒரு விழாவை நடத்தினார்கள். அதில் விஷ்ணு பல விஷயங்களை பகிர்ந்தார்.
இதையும் படிங்க: எனக்கும், விஜய்க்கும் நிறைய பிரச்னை இருந்தது… ஆனாலும்?… ஓபனாக பேசிய பிரபல நடிகர்…
அதாவது வீட்டில் மற்ற யார் என்ன சொன்னாலும் எனக்கு கோபம் வரும். ஆனால் ரவீனா சொன்னால் மட்டும் கோவம் வராது. அந்தளவுக்கு அவளை பிடிக்கும் என்று சொன்னதோடு ரவீனா மட்டும் தனியாக விளையாடியிருந்தால் கண்டிப்பாக எல்லாரையும் வெளியே அனுப்பிவிட்டு அவள்தான் டைட்டில் வின்னர் ஆகியிருப்பார் என்று விஷ்ணு கூறினார்.
அவளுடைய அந்த சிறுபிள்ளைத்தனத்தால் அவளுக்கு எப்போதும் ஒரு துணை இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததனால் அவளால் டைட்டில் வின்னர் ஆக முடியவில்லை. ஆனால் தனியாக விளையாடியிருக்க வேண்டும் என விஷ்ணு கூறினார்.
இதையும் படிங்க: அந்த விஷயத்துக்காக இரவில் சுவரேறி குதித்த சிவாஜி… பிரபல நடிகர் சொல்லும் சீக்ரெட்…