விஜயால் கிடைத்தது தான் அது… எதிர்நீச்சல் மாரிமுத்துவின் இந்த பொக்கிஷத்துக்கு இதான் காரணமா?

by Akhilan |
விஜயால் கிடைத்தது தான் அது… எதிர்நீச்சல் மாரிமுத்துவின் இந்த பொக்கிஷத்துக்கு இதான் காரணமா?
X

SJ Surya: எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி படத்தில் வேலை செய்த இயக்குனர்களுக்கும், அசோசியேட்களுக்கும் எஸ்.ஜே.சூர்யா பைக் வாங்கி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் அந்த சம்பவத்தில் ஒரு ட்விஸ்ட் இருந்ததாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளது.

1999ம் ஆண்டு வெளிவந்த படம் வாலி. இப்படத்தினை எஸ்.ஜே.சூர்யா இயக்கினார். அஜித், சிம்ரன், ஜோதிகா, விவேக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஹீரோ மற்றும் வில்லனாக அஜித் நடிக்க படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.

இதையும் படிங்க: அட! என்னமா அவரு சிம்பிள்ளா இருந்தா சீனை போடுவீங்களா..? ரஜினிக்கு நடந்த அவமரியாதை..!

இப்படத்தில் தான் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து. எஸ்.ஜே.சூர்யாவின் அசிஸ்டெண்ட்டாக அந்த படத்தில் பணிபுரிந்தார். அந்த படத்துக்கு எஸ்.ஜே.சூர்யா உட்பட அனைத்து குழுவுக்குமே சம்பளம் வரவில்லையாம். ஆனால் அதை தொடர்ந்து படத்தின் வெற்றியால் படக்குழுவிற்கே பைக் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் அந்த பைக்கினை வாலி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து கொடுக்கவில்லையாம். வாலி படத்தின் வெற்றியால் விஜயை வைத்து குஷி படத்தினை இயக்க எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவருக்கு முதல் தொகையாக அட்வான்ஸ் பணம் கொடுத்தார்களாம்.

இதையும் படிங்க: ‘லால்சலாம்’ படத்தில் வேதனையை கொட்டித்தீர்த்த ரஜினி! எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார் பாருங்க

அந்த பணத்தை அப்படியே எடுத்து கொண்டு போய் ஷோரூமில் கொடுத்து தன்னுடைய உதவியாளர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், மாரிமுத்து ஆகிய டீம் அனைத்துக்குமே பைக் வாங்கி கொடுத்தாராம். இதில் அஜித்துக்கு எந்த சம்மந்தமே இல்லையாம். அந்த பைக்கை மாரிமுத்து ரொம்ப நாட்களாகவே வைத்து இருந்தாராம்.

Next Story