Vijay: அப்ப மட்டும் இனிச்சிது… இப்போ என்ன? விஜயின் அரசியல் சிக்கல்தான்.. பொளக்கும் பிரபலம்
Vijay: நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவருடைய ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் மிகப்பெரிய சிக்கல் ஒன்றில் சிக்கிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம்
பெரும்பாலும் பிரபலங்கள் அரசியலுக்கு வரும்போது அவர்களுடைய கேரியர் உச்சத்திலிருந்து பாதாளத்தில் சென்று இருக்கும். ஆனால் எம்ஜிஆர் பின்னர் தன்னுடைய கேரியரில் முதலிடத்தில் இருக்கும் தளபதி விஜய் அதை துறந்து அரசியலுக்குள் உள்ளே வர இருக்கிறார்.
இதையும் படிங்க: Gossip: விரல் வித்தை நடிகரின் மாஸ் கம்பேக்… நம்பர் நடிகையின் வீழ்ச்சி!… இப்படி ஆகிப்போச்சே!
இதற்கான முன்னேற்பாடாக முதலில் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் பல விஷயங்களை குறிப்பிட்டு தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ந்து அவரின் மாநில மாநாடு சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்.
ஃபெங்கல் புயல் நிவாரணம்
சமீபத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய ஃபெங்கல் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்து விஜய் வழங்கியது தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது. பலரும் அவருக்கு எதிராகவும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
நேரடியாக இருப்பிடத்திற்கு செல்லாமல் அவர்களை பல கிலோமீட்டர் தாண்டி அழைத்து வந்து கொடுப்பது எப்படி நிவாரணமாகும். அரசியலுக்கு வர நினைக்கும் விஜய் இதை செய்யலாமா என்ற கேள்விகளும் எழுந்து இருக்கிறது. ஆட்சியில் இருக்கும் கட்சியினர் செய்யாமல் தன்னுடைய சொந்த பணத்திலிருந்து செய்யும் விஜய் கேள்வி கேட்பது எப்படி நியாயமாகும் என ரசிகர்களும் கொந்தளித்து வருகின்றனர்.
பிரபல திரை விமர்சகர் பிஸ்மியின் கருத்து
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கூட்டம் எப்பயுமே விஜய்க்கு புதிது கிடையாது. இதற்கு முன்னர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, ஜல்லிக்கட்டு போராட்டம், அனிதாவின் மரணம் என பல முக்கிய விஷயங்களுக்கு முதல் ஆளாக போய் நின்றவர். அப்போதெல்லாம் அரசியல் ஆசை இருந்ததால் தான் இதை செய்தார்.
இப்போது மட்டும் இது கசப்பது ஏன்? அரசியலுக்குள் நுழைந்த சமயத்தில் விஜய் இப்படி நடந்து கொள்வது அவருக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும். இதற்கு விஜய் இரண்டு விஷயங்களை தான் செய்திருக்க வேண்டும். தைரியம் இருந்தால் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி இருக்க வேண்டும்.
இல்லை தன்னுடைய கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ரூமில் அமர்ந்து கொண்டு நிவாரணம் வழங்குவது சரியாக இருக்காது. நாளை ஓட்டு கேட்க வரும் போது இதே வழியை அவரால் செய்ய முடியுமா?
இதையும் படிங்க: படத்துல 3 ஹீரோயின்களா?.. புஷ்பா 2 எப்படி இருக்கு?.. பயில்வான் என்ன இப்படி சொல்லிட்டாரு!..
தைரியமாக சைக்கிள் ஓட்டு போட சென்ற விஜய் இதை கூறலாமா? கூட்டத்தை தவிர்க்க நினைக்கும் உங்களுக்கு எதற்கு அரசியல். சினிமாவில் நடித்துவிட்டு கேரவனிற்குள் உட்கார்ந்து கொள்ளலாமே. அரசியல் களத்துக்குள் இறங்கினால் தான் உங்களுடைய எதிர்காலத்திற்கு நல்லது. அதை விடுத்தால் இப்பவும் நேரம் ஆகவில்லை பின்வாங்கிக் கொண்டு தளபதி 70, 71 என நடிக்க செல்லுங்கள்.
இந்த நேரத்தில் விஜய் இதைப் போன்ற விமர்சனங்களை எதிர்கொள்வது நல்லதாக தான் நான் பார்க்கிறேன். அப்பொழுது தான் அவர் இதை எல்லாம் கணித்து தன்னை எப்படி மாற்றிக் கொள்ளலாம் என முடிவெடுப்பார். நீங்கள் மக்களுக்கு நல்ல விஷயங்களை விதைக்காமல் போனால் நாளை உங்களுடைய தேர்தல் சமயத்தில் அது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.