சிவகார்த்திகேயன் ஒரு போலி!.. எல்லாம் பொய்!.. போட்டு பொளக்கும் பிஸ்மி!…

Published on: January 6, 2026
bismi
---Advertisement---

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அந்த படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் 10ம் தேதி வெளியாகுவது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனநாயகனின் வசூலை குறைப்பதற்காகவே வேண்டுமென்றே இதை செய்திருக்கிறார்கள் என பராசக்தி தயாரிப்பாளரையும், சிவகார்த்திகேயனையும் கடுமையாக திட்டி வருகிறார்கள்.

பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் இதுபற்றி விளக்கமளித்த சிவகார்த்திகேயன் ‘ஜனவரி 10ம் தேதி என்பது தயாரிப்பாளர் எடுத்த முடிவு.. இதுபற்றி விஜய் சாரிடமே தெரிவித்தோம். அவர் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லியதோடு எனக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.. இது அண்ணன் தம்பி பொங்கல்’ என்றெல்லாம் சொன்னார். இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் மற்றும் வலைப்பேச்சு பிஸ்மி இதை மறுத்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் பராசக்தி இசை வெளியிட்டு விழாவில் சொன்னது எல்லாமே பொய்.. கேமரா இல்லாமலும் அவர் நன்றாகவே நடிக்கிறார். ஒருவேளை விஜயிடம் சிவகார்த்திகேயன் பேசியிருந்தால் விஜய் இவரிடம் ‘உங்கள் படத்தை தள்ளி வையுங்கள்.. உங்களால் என் படத்தின் வசூல் பாதிக்கும்’ என்றா சொல்வார்?.. சிவகார்த்திகேயன் படத்தின் படத்தால் தன்னுடைய படத்தின் வசூல் பாதிக்கும் என விஜய் ஒருபோதும் நினைக்க மாட்டார்.

9ம் தேதி ஜனநாயகன் பாருங்கள்.. 10ம் தேதி என் படத்துக்கு வாருங்கள் என்கிறார். ஜனநாயகன் படம் ஒரே நாளில் தேவையான வசூலை பெற்று விடுமா?.. குறைந்தபட்சம் 5 நாட்கள் மற்ற படத்தின் போட்டி இல்லாமல் இருந்தால்தான் வசூலை பெறும். இது சிவகார்த்திகேயனுக்கு தெரியாதா?..

ஜனநாயகம் படத்தின் வசூலை குறைக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக மட்டுமே தனது படத்தை 10ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளார் சிவகார்த்திகேயன். ஒரு படத்தின் ஹீரோ நினைத்தால் ரிலீஸ் தேதியை மாற்ற முடியும்.. இது விஜய் சாரின் கடைசி படம் அவரின் படம் நல்ல வசூலை பெறட்டும் ரிலீஸ் தேதியை மாற்றுங்கள் என சிவகார்த்திகேயன் சொன்னால் கண்டிப்பாக அதற்கு தயாரிப்பாளர் சம்மதிப்பார்.

ஆனால் சிவகார்த்திகேயன் செய்திருக்க மாட்டார். ஏனெனில் இதுவரை விஜய்க்கு அடுத்தது தான்தான் நினைத்தவர் இப்போது விஜயுடனே போட்டி என்கிற மனநிலைக்கு வந்து விட்டார். ஒருவேளை ஜனநாயகன் படம் எதிர்பார்த்த வசூலை பெறாமல் போனால் விஜய் படத்தையே நான் காலி செய்து விட்டேன் என மார்தட்டிக் கொள்வார் சிவகார்த்திகேயன்.

ஜனநாயகன் படத்தின் டிரைலர் இரண்டு நாட்களில் நான்கு 3.9 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். ஆனால் பராசக்தி ஒரே நாளில் 4 கோடியை தாண்டியது எப்படி? வேண்டுமென்றே பணம் கொடுத்து வியூஸை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். பராசக்தி ஒரு நல்ல கன்டென்ட் உள்ள ஒரு கதை. அதை ஏன் ஜனநாயகன் படம் வரும்போது ரிலீஸ் செய்ய வேண்டும்?.. இரண்டு வாரம் கழித்து கூட ரிலீஸ் செய்யலாம். சிவகார்த்திகேயன் ஒரு போலியான நபர் என நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

என்னை திட்டுவதற்கு கூட பல youtube சேனலுக்கு பணம் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். நிறையபேர் பார்க்கும் youtube சேனல்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பணம் கொடுத்து ஜனநாயகன் படத்தை மட்டம் தட்டியும், பராசக்தி படத்தை தூக்கிப் பேசவும் சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால் வெளியில் நடித்துக் கொண்டிருக்கிறார்’ என போட்டு பொளந்திருக்கிறார் பிஸ்மி.