ஏறிவந்த ஏணியை இப்படியா எட்டி உதைப்பது? சிவகார்த்திகேயனுக்கு அப்படி ஒரு தெனாவெட்டா?

by sankaran v |
SK
X

SK

கொட்டுக்காளி படத்தின் ஆடியோ லாஞ்ச்ல சிவகார்த்திகேயன் தனுஷைப் பற்றித் தான் பேசினாரான்னு பலரும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தில் உள்ளனர். ஆனால் உண்மையிலேயே நடந்தது என்ன என்பதை பிரபல வலைப்பேச்சு பிஸ்மி தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்கிறார்னு பார்ப்போமா...

சிவகார்த்திகேயன் தனுஷைத் தான் சொன்னார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில் தனுஷ10க்கு பெரும் பங்கு உண்டு.

Marina movie

Marina movie

தனுஷ் தான் சிவகார்த்திகேயனைத் தனது படத்தில் கூடவே வரும் காமெடி ரோலில் நடிக்க வைத்தார். எதிர்நீச்சல் என்ற படத்தை எடுத்து மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்தது. அப்போது தனுஷைப் பற்றி பல இடங்களில் பேச ஆரம்பித்து விட்டார். அது தான் உண்மை.

எல்லாவற்றுக்கும் மேல தனுஷ் மேல இவருக்கு தனிப்பட்ட வன்மம் இருக்கு. நுங்கம்பாக்கத்துல தனுஷ10க்கு ஆபீஸ் இருக்கு. சிவகார்த்திகேயன் வம்படியா அதுக்கு எதிர்லயே ஆபீஸ் போட்டாரு. நான் வளர்ந்துட்டேன் பார்த்தியான்னு ஒரு தெனாவட்டான மனநிலை இருந்தது. அது தான் காரணம்.

இப்படி ஒரு மனநிலை இருந்ததனால அவரு தனுஷைத் தான் அப்படி சொன்னாருங்கறதை நான் நம்பறேன். அதே போல சோஷியல் மீடியாவுலயும் போய் பார்த்தா அத்தனை பேருமே இதைத் தான் சொல்றாங்க. சிவகார்த்திகேயனோட இணைய கூலிப்படை தான் அதை டைவர்ட் பண்ணுது.

அதே நேரம் தனுஷ் பொது மேடைகளிலோ வேறு ஏதாவது நிகழ்ச்சிகளிலோ நான் தான் சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டேன்னு சொன்னதே இல்லை. அப்படி இருக்கும்போது இவர் ஏன் இப்படி பேசணும்? இவர் தனுஷைப் பேசலன்னே வச்சிக்குவோம். ஆனா பெயர் குறிப்பிடாம இப்படிப் பேசும்போது யாராவது இதைத் தனுஷைத் தான் பேசினாங்களோன்னு நினைக்கிறதுக்கும் வாய்ப்பு இருக்கு.

இது இவருக்கும் தெரியும் அல்லவா? அப்படின்னா இவர் அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்திருக்கலாமே. அப்படி பேசியிருந்தா தெனாவட்டுத் தான் காரணம். அதுவும் இல்லாம அவர் பேசும்போது இருந்த மேனரிசம், நக்கல் எல்லாம் பார்க்கும்போது அது தனுஷைத் தான் என்று நான் நம்புறேன்.

தனுஷ் அப்படித்தான் பேசினதாவே இருக்கட்டுமே. அதை ஏன் சிவகார்த்திகேயன் பெருந்தன்மையா எடுத்துக்கக்கூடாது. மெரினா படத்துக்கு தயாரிப்பாளர் பாண்டிராஜ். ஆனா அவருக்கே கால்ஷீட் கொடுக்காம இழுத்தடித்தார். சிவகார்த்திகேயனுக்கு தனிப்பட்ட விஷயத்தில் மிகப்பெரிய பிரச்சனை வந்தது.

அது அண்ணா அறிவாலயம் பக்கத்துல இருக்குற ஹயாத் ஓட்டல்ல நடந்தது. அது மட்டும் வெளியே தெரிஞ்சா சிவகார்த்திகேயன் என்ற நடிகரே இருக்க மாட்டாரு. அந்த நேரத்துல அவரைக் காப்பாற்றினது தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன். அந்த நன்றி கூட அவருக்க இல்ல.

அந்த இடத்துல வேறொரு நடிகர் இருந்தா வருஷத்துக்கு 2 படத்துக்கு கால்ஷீட் கொடுப்பாரு. ஆனா அவரையே தூக்கிப் போட்டவரு தான் சிவகார்த்திகேயன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story