Connect with us
loki

Cinema News

இதே ஃபார்மோட போனா தலைவர அட்டாக் பண்ணிடலாம்! ரஜினி171ல் லோகேஷுக்கு டிப்ஸ் கொடுத்த ப்ளூசட்டை மாறன்

Blue Sattai Maran: இன்றைக்கு ஒரு  படம் வெளிவருகிறது என்றால் அந்தப் படத்தை பற்றிய ஹைப்பை விட அந்தப் படத்தை எப்படி விமர்சனம் செய்யப் போகிறாரோ ப்ளூசட்டை மாறன் என்ற ஹைப் தான் பிரபலங்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் இருந்து வருகிறது. அந்தளவுக்கு திரைப்படங்களை கிண்டலாகவும் கேலியாகவும் விமர்சனம் செய்பவர்தான் இந்த ப்ளூசட்டை மாறன்.

எந்தவொரு பாரபட்சமும்  பார்க்காமல் டாப் நடிகர், நடிகைகளில் இருந்து தலைசிறந்த இயக்குனர்களின் படங்கள் வரை ஒருத்தரையும் விட்டுவைக்காமல் விமர்சித்திருக்கிறார் இவர்.இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்த நிலையில் தொக்கா மாட்டியது நேற்று வெளியான லியோ திரைப்படம்.

இதையும் படிங்க: விஜய்க்கே படம் பிடிக்கலையா!.. கடைசி வரை லியோவை கண்டுக்காமல் விட காரணமே அதுதானா?..

வழக்கமாக படத்தின் கதை இதுதான் என சொல்லிவிட்டு வீடியோ கேமில் எல்லாரையும் பொட்டு பொட்டுனு சுடுற மாதிரி வந்த 1000 பேரையும் அசால்டா சுடுறாரு விஜய். அதில் தன் கூட கடைசியில் யார் பேசனுமோ அவன மட்டும் விட்டு மத்த எல்லாரையும் சுட்டு தள்ளுறாரு.

ஒரு படத்திற்கு ப்ளஸே வில்லன்தான். அவனையும் டம்மியா காட்டியிருக்கிறாரு லோகேஷ். புத்திசாலியா இல்லேனாக் கூட பரவாயில்ல. முட்டாள் பயலாக இருக்கிறான். மூட நம்பிக்கை உள்ளவனாக நரபலி  குடுக்கிறவனால இருக்கான்.

இதையும் படிங்க: அடிச்ச அடி அப்படி!.. அமெரிக்காவில் கபாலியை காலி செய்த லியோ.. உலகளவில் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

இதுல LCUனு உள்ளே வராரு கமல். என்ன கதை ஓடிக்கிட்டு இருக்குனு தெரியாமலேயே வா என்கூட வந்து சேர்ந்துரு. ஒட்டுமொத்த போதை பொருளையும் அழிச்சிடலாம் என கூப்பிடாரு. ஆனால் இங்க நடந்த கதையே வேற.

விஜய் வைத்திருந்த காஃபி கடையை அடிச்சி நொறுக்கிட்டாங்க. வேற என்ன பண்ணலாம். கஞ்சா விக்க போலாமானு விஜய் யோசிச்சிட்டு இருக்கும் போது என் கூட வந்துருனு ஒரு கேரக்டரு ஒலறிகிட்டு இருக்கு  என கமல் கேமியோவை கிண்டலடித்து பேசியிருக்கிறார்.

படத்தில் உருப்படியான விஷயம் என்றால் அந்த ஹைனாவுக்கு செய்த கிராஃபிக்ஸ் நம்பும் படியாக இருந்தது. ஆனால் இதுதான் கஷ்டமான விஷயம். இத நல்லா பண்ணிட்டாங்க. ஆனால் கார் சேஸிங்லாம் வச்சிருந்தாங்க. அதுல கோட்ட விட்டாங்க.

இதையும் படிங்க: தாத்தாவ வச்சே படம் எடுக்குறீங்க! அப்பா என்ன தக்காளி தொக்கா?.. தயாரிப்பாளரிடம் மல்லுக்கு நின்ன தனுஷ் மகன்..

காபி ஷாப் சண்டை காட்சிகள் ரசிக்கும் படியாக இருந்தது. இவ்ளோ பெரிய பட்ஜெட்டில் தங்களுக்குண்டான சம்பளத்தை எடுத்துக்கிட்டு மீதமுள்ள பணத்தில் தான் படத்தை எடுத்திருப்பாங்க போல.

படத்தின் டைரக்டர் லோகேஷ் ஒரு பேட்டியில் என் வாழ்நாளில் 10 படத்திற்கு மேல பண்ணமாட்டேனு சொல்லியிருக்கிறாரு. இது அவருக்கு 5வது படம். இந்தப் படமே கழுதை தேஞ்சு கட்டெறும்பான மாதிரி அதற்கு குறியீடா ஆரம்பத்திலேயே கழுதைப் புலியை காட்டியிருக்காரு.

இந்தப் படத்தை பார்த்தாலே தெரியுது. இவர் வாழ்நாளில் கைதி படத்தை மாதிரி இன்னொரு படத்தை கொடுக்க சாத்தியமே இல்லனு. இதுல அடுத்து நம்ம தலைவரை வச்சு வேற படம் எடுக்க போறாரு லோகேஷ். இன்னிக்கு நம்ம ஏரியால தலைவர போடுறதுக்கு ஷார்ப்பான புள்ளி லோகேஷ் தான். இதே ஃபார்மோட போயி தலைவர அட்டாக் பண்ணிடுங்க என ப்ளூசட்டை மாறன் கழுவி கழுவி ஊத்தியிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top