யார்கிட்ட இருந்து வேணுனா தப்பலாம்! ப்ளூ சட்டை மாறன்கிட்ட முடியுமா? சிவகார்த்திகேயனை கிழித்து தொங்கவிட்ட பதிவு

Published on: January 6, 2024
siva
---Advertisement---

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் வரும் 12 ஆம் தேதி அயலான் என்ற திரைப்படம் வெளியாக இருக்கின்றது. சயின்ஸ் ஃபிக்‌ஷனாக உருவான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் படத்திற்கான ப்ரோமோஷனில்தான் இப்போது சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில்தான் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவும் நடந்து முடிந்தது. இதற்கிடையில் விஜயகாந்தின் மறைவுக்கு சிவகார்த்திகேயன் வரவில்லை.

இதையும் படிங்க: வறுமையில் வாடும் விஜயகாந்த் சகோதரர்கள்! ஊருக்கே உதவியவர் – அவர் தம்பிகளுக்கு இப்படி ஒரு நிலைமையா?

அவர் மட்டுமில்லை. கோலிவுட்டில் இருக்கும் முக்கிய நடிகர்கள் யாருமே வரவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இன்று விஜயகாந்த் இல்லம் தேடி ஒருவர் பின் ஒருவராக வரிசை கட்டிக் கொண்டு அஞ்சலி செலுத்த வந்து கொண்டிருக்கின்றனர்.

நேற்று சூர்யா வந்து கதறி அழுதது விஜயகாந்த்  மீதுள்ள அன்பாக இருக்கலாம். ஆனால் அதை பார்த்த ரசிகர்கள் சூர்யா அழுததை பற்றி சமூக வலைதளத்தில் கிண்டலடித்த வண்ணம் இருந்தனர். அவரை தொடர்ந்து ஜெயம் ரவியும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிங்க: இரவோடு இரவாக கேப்டன் செய்த வேலை!.. ஆடிப்போய் சத்தியராஜ் செய்த காரியம்…

இது அடுத்தடுத்து ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஏனெனில் அவர் மறைவிற்கு வர முடியாத இவர்கள் இன்று மொத்தமாக வந்து நாடகம் போடுவதை போல் இருக்கிறது என மக்கள் எண்ண ஆரம்பித்துவிட்டனர். ஏனெனில் இன்று நடைபெறும் கலைஞர் விழாவிற்கு அனைவரும் கண்டிப்பாக வந்தாக வேண்டும்.

அதன் காரணமாக வெளியூர் விடுமுறை பயணம் போன அனைவரும் அடுத்தடுத்து வந்து இறங்கினார்கள். ஆனால் இதில் சிவகார்த்திகேயன் சென்னையிலேயே இருந்து கொண்டு வராமல் போனதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதை குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் அவருடைய இணையதள பக்கத்தில் விஜயகாந்த் வீட்டில் அஞ்சலி செலுத்த போன சிவகார்த்திகேயன் போஸ்டரை போட்டு ‘ஒரு வாரகாலமாக சென்னையில் இருந்த சிவகார்த்திகேயன் இன்று சென்னை திரும்பினார்’ என்று நக்கலாக பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் காலியான போட்டியாளர்!… பிக்பாஸ் சீசன் 7ல் டிவிஸ்டுக்கு மேல் டிவிஸ்ட்டா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.