Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் வரும் 12 ஆம் தேதி அயலான் என்ற திரைப்படம் வெளியாக இருக்கின்றது. சயின்ஸ் ஃபிக்ஷனாக உருவான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப் படத்திற்கான ப்ரோமோஷனில்தான் இப்போது சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில்தான் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவும் நடந்து முடிந்தது. இதற்கிடையில் விஜயகாந்தின் மறைவுக்கு சிவகார்த்திகேயன் வரவில்லை.
இதையும் படிங்க: வறுமையில் வாடும் விஜயகாந்த் சகோதரர்கள்! ஊருக்கே உதவியவர் – அவர் தம்பிகளுக்கு இப்படி ஒரு நிலைமையா?
அவர் மட்டுமில்லை. கோலிவுட்டில் இருக்கும் முக்கிய நடிகர்கள் யாருமே வரவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இன்று விஜயகாந்த் இல்லம் தேடி ஒருவர் பின் ஒருவராக வரிசை கட்டிக் கொண்டு அஞ்சலி செலுத்த வந்து கொண்டிருக்கின்றனர்.
நேற்று சூர்யா வந்து கதறி அழுதது விஜயகாந்த் மீதுள்ள அன்பாக இருக்கலாம். ஆனால் அதை பார்த்த ரசிகர்கள் சூர்யா அழுததை பற்றி சமூக வலைதளத்தில் கிண்டலடித்த வண்ணம் இருந்தனர். அவரை தொடர்ந்து ஜெயம் ரவியும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிங்க: இரவோடு இரவாக கேப்டன் செய்த வேலை!.. ஆடிப்போய் சத்தியராஜ் செய்த காரியம்…
இது அடுத்தடுத்து ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஏனெனில் அவர் மறைவிற்கு வர முடியாத இவர்கள் இன்று மொத்தமாக வந்து நாடகம் போடுவதை போல் இருக்கிறது என மக்கள் எண்ண ஆரம்பித்துவிட்டனர். ஏனெனில் இன்று நடைபெறும் கலைஞர் விழாவிற்கு அனைவரும் கண்டிப்பாக வந்தாக வேண்டும்.
அதன் காரணமாக வெளியூர் விடுமுறை பயணம் போன அனைவரும் அடுத்தடுத்து வந்து இறங்கினார்கள். ஆனால் இதில் சிவகார்த்திகேயன் சென்னையிலேயே இருந்து கொண்டு வராமல் போனதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதை குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் அவருடைய இணையதள பக்கத்தில் விஜயகாந்த் வீட்டில் அஞ்சலி செலுத்த போன சிவகார்த்திகேயன் போஸ்டரை போட்டு ‘ஒரு வாரகாலமாக சென்னையில் இருந்த சிவகார்த்திகேயன் இன்று சென்னை திரும்பினார்’ என்று நக்கலாக பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் காலியான போட்டியாளர்!… பிக்பாஸ் சீசன் 7ல் டிவிஸ்டுக்கு மேல் டிவிஸ்ட்டா?
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…